Jammu and Kashmir Kupwara: பாகிஸ்தானின் இந்த அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஹைலைட்ஸ்
- Jammu & Kashmir-ன் குப்வாராவில் இச்சம்பவம் நடந்துள்ளது
- 3 வீடுகள் இந்த தாக்குதலால் சேதமடைந்துள்ளது
- கடந்த வாரமும் இதைப் போன்ற ஒரு தாக்குதல் நடந்தது
Srinagar: எல்லை தாண்டி பாகிஸ்தான் (Pakistan) ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலால் 2 ராணுவ வீரர்கள் மற்றும் பொது மக்களில் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது. ஜம்மூ காஷ்மீரின் (Jammu Kashmir) குப்வாரா மாவடத்தில் பாகிஸ்தான், இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக போலீஸ் தகவல் கூறியுள்ளது. இந்த தாக்குதலில் 3 பேருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாம்.
பாகிஸ்தானின் இந்த அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரமும் பாகிஸ்தான் தரப்பு இதைப் போன்ற ஒரு தாக்குதலில் ஈடுபட்டது. காஷ்மீரின் பரமுல்லா மற்றும் ராஜவ்ரியில் நடந்த அந்த தாக்குதல்களில் 2 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
ஜம்மூ காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டதில் இருந்து, இதைப் போன்ற எல்லை மீறிய தாக்குதல்களை பாகிஸ்தான் அதிகமாக நிகழ்த்தி வருகிறது என்று இந்திய ராணுவ வட்டாரம் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 296 எல்லை மீறிய தாக்குதல்கள், ஆகஸ்ட் மாதம் 307 தாக்குதல்கள், செப்டம்பரில் 292 தாக்குதல்கள் நடந்துள்ளதாக பிடிஐ கூறுகிறது.
இதுவரை பாகிஸ்தான் தரப்பு 2,050 எல்லை மீறிய தாக்குதல்களை நிகழ்ச்சி, அதில் பொது மக்களில் 21 பேரைக் கொன்றுள்ளது என்று மத்திய அரசு சொல்கிறது. தொடர்ந்து இந்திய தரப்பு பாகிஸ்தானிடம், 2003 ஆம் ஆண்டு போடப்பட்ட எல்லைக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை மதித்து நடக்குமாறு வலியுறுத்தி வருகிறது.