This Article is From May 24, 2020

சிஏஏ போராட்டத்தில் பங்கேற்றதற்காக ஜேன்யூ மாணவர்கள் இருவர் கைது!

இவர்கள் மீது மீது ஐபிசி (இந்திய தண்டனைச் சட்டம்) பிரிவு 186 (பொது ஊழியர்களின் பொதுச் செயல்பாடுகளைத் தடுப்பது) மற்றும் 353 (அரசு ஊழியரை தனது கடமையை நிறைவேற்றுவதைத் தடுப்பது) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement
இந்தியா Posted by
New Delhi:

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடியதற்காக கடந்த ஒரு மாத காலத்தில் பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் தற்போது இரண்டு மாணவிகள் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.  பிப்ரவரியில் ஜஃப்ராபாத் மெட்ரோ நிலையத்தில் நடைபெற்ற சி.ஏ.ஏ எதிர்ப்பு உள்ளிருப்புப் போராட்டத்தை பெண்கள் தலைமைத்தாங்கி முன்னெடுத்தனர். இதில் பங்கேற்ற ஜவஹலால் நேரு பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவிகள் தற்போது கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்தினை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் 50க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்திற்கு காரணமானவர்கள் ஒருபோதும் தப்பிக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அப்போது தெரிவித்திருந்தார். டெல்லியில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக பாஜக தலைவரான தீபக் மிஸ்ரா தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த மோதல்கள் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டன.

தற்போது கைது செய்யப்பட்டவர்கள் தேவங்கனா கலிதா மற்றும் நடாஷா நர்வால் - டெல்லியைச் சேர்ந்த பிஞ்ச்ரா டோட் (பிரேக் தி கேஜ்) குழுவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மீது மீது ஐபிசி (இந்திய தண்டனைச் சட்டம்) பிரிவு 186 (பொது ஊழியர்களின் பொதுச் செயல்பாடுகளைத் தடுப்பது) மற்றும் 353 (அரசு ஊழியரை தனது கடமையை நிறைவேற்றுவதைத் தடுப்பது) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

1984 சீக்கிய எதிர்ப்பு போராட்டத்திற்கு பின்னர் ஏற்பட்ட மிகப்பெரிய போராட்டமாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் பார்க்கப்படுகின்றது. வன்முறையானது 4 சதவிகிதத்திற்குள் கட்டுப்படுத்தப்பட்டு, 13 சதவிகித மக்கள் பாதிப்போடு 36 மணி நேரத்தில் டெல்லி காவல்துறை கட்டுப்படுத்தியது என மத்திய உள்துறை அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது நாடு முழுவதும் 1.3 லட்சம் மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,800க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் அதிக அளவு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது. அடுத்தப்படியாக தமிழகமும், குஜராத்தும் உள்ளது.

Advertisement

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக போராட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு ஏற்கெனவே நடைபெற்ற போராட்டங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன. டெல்லி ஷாகீன்பாக் போராட்டமானது 101 நாட்களுக்கு பிறகு அப்புறப்படுத்தப்பட்டது.

Advertisement