இன்னும் ஒரு சில நிமிடங்களில் அவர்கள் கோயிலுக்குள் செல்வார்கள் என்று தெரிகிறது
Pamba/New Delhi: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 2 பெண்கள், 300 போலீஸ் பாதுகாப்புடன் இன்று நுழைய இருந்தனர். அவர்கள் கோயிலுக்கு மிக அருகில் சென்ற போது, போராட்டக்காரர்கள் பெரும் அளவு கூடி, எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இரண்டு பெண்களும் சபரிமலையிலிருந்து கீழே இறங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு, இந்த இரண்டு பெண்கள் தான் முதன்முறையாக கோயிலுக்குள் செல்ல உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. கோயிலின் நடை திறந்து 3 நாட்கள் கடந்துள்ள நிலையில், பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று போராட்டக்காரர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
நிலைமை குறித்து கோயிலின் தலைமை அர்ச்சகர் கண்டராரு ராஜீவாரு, 'நாங்கள் கோயிலை மூடிவிட்டு, அதன் சாவியை சமர்பிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளோம். எங்களுக்கு அதைத் தவிர வேறு வழியில்லை. நாங்கள் பக்தர்களுக்கு ஆதரவாக இருக்க முடிவெடுத்துள்ளோம்' என்று தெரிவித்துள்ளார்.
2 பெண்களில் ஒருவர் ஐதரபாத்தில் இருக்கும் மோஜோ டிவி-யைச் சேர்ந்த பத்திரிகையாளர் கவிதா ஜக்கல். இன்னொருவர் இருமுடி கட்டி, ஐயப்பனை தரிசிக்க வந்த பெண். இருவரில் போராட்டக்காரர்களிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள, முழு உடல் கவசத்துடன் கவிதா ஏறியுள்ளார். ஆனால், ஐயப்ப பக்தரான இன்னொருப் பெண், கவசங்கள் ஏதுமின்றி போலீஸ் பாதுகாப்புடன் ஏறியுள்ளார்.
சபரிமலையின் அடிவாரமான பம்பாவிலிருந்து 4.6 கிலோ மீட்டர் பயணத்தை இரண்டு பெண்களும் ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கு இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஸ்ரீஜித் தலைமையில் பாதுகாப்பு வழங்கப்பட்டது. முன்னர் போலீஸ், சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்திருந்தது.
2 பெண்களும் போலீஸ் பாதுகாப்புடன் மலையேறிய போது, அவர்களுடன் போராட்டக்காரர்கள் சிலறும் ஏறியுள்ளனர்.
கடந்த 2 நாட்களாக பெண்களை சபரிமலை கோயிலுக்குள் விடக் கூடாது என்று கோரி பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல பத்திரிகையாளர்கள், பெண்கள், பெண் போலீஸ் உள்பட பலர் தாக்குதலுக்கு உள்ளாகினர்.
கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘பெண்களைத் தடுக்க யாருக்கும் அனுமதி இல்லை' என்று நேற்று தெரவித்திருந்தார்.