This Article is From Aug 21, 2018

கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் நிதி உதவி

கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் நிதி உதவி
New Delhi:

அதி தீவிர வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாக, முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். உருகுலைந்து கிடக்கும் கேரளாவை மீண்டும் கட்டமைக்க இந்த நிதி உதவி வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த மக்கள் பலருக்கு ஐக்கிய அரபு அமீரகம் தான் வீடாக உள்ளது. கணக்கெடுப்பின் படி அங்கு 20 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். அந்நாட்டின் 30% மக்கள் தொகை இந்தியர்களுடையது.  ஐக்கிய அரபு அமீரகம் முதல் நாடாக கேரளாவுக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளது. “ ஐக்கிய அரபு அமீரகத்தின் வெற்றியில் கேரள மக்கள் எப்போதும் பங்காற்றியுள்ளனர். பங்காற்றியும் வருகின்றனர்” என்று கேரளாவுக்கு உதவுவது தங்கள் கடமை என்றும் அந்நாட்டு துணை அதிபர் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். 

இது வரை இந்திய அரசு அறிவித்துள்ள நிவாரண நிதி 680 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பேரிடரை, அதி தீவிர பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், கேரளாவுக்கு மத்திய அரசிடம் இருந்து கூடுதலாக நிதி உதவி கிடைக்கும்.

இப்போது கேரளாவில் கொஞ்சம் கொஞ்சமாக மீட்புப் பணிகளை நிறுத்திக் கொண்டு, மறு சீரமைப்பு பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கி இருப்பதாக, கேரள வருவாய் துறை அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். 95% மக்கள் மீட்கப்பட்டுவிட்டனர். மீதம் இருப்பவர்களை மீட்கும் பணிகளும் நடந்து வருவதாகும் அவர் தெரிவித்தார்.

.