This Article is From Jan 31, 2019

உணவு டெலிவரியை தொடர்ந்து, மும்பையில் படகு போக்குவரத்தை தொடங்கிய 'ஊபர்'!

ஊபர் போட்: மும்பையில் கடல் வழி போக்குவரத்தை துவங்கவுள்ள 'ஊபர்' நிறுவனம்.

உணவு டெலிவரியை தொடர்ந்து, மும்பையில் படகு போக்குவரத்தை தொடங்கிய 'ஊபர்'!

வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் போக்குவரத்தை துவங்கும் 'ஊபர் போட்'.

Mumbai:

இந்தியாவில் மிகவும் பிரபலமான டாக்சி நிறுவனங்களில் ஓன்றாக திகழ்ந்த ஊபர் நிறுவனம், சமீபத்தில் உணவு டெலிவரி வணிகத்திற்குள் இறங்கி கலக்கியது மட்டுமில்லாமல் தனக்கென முன்னணி இடத்தை தக்கவைத்தது.

தொடர் வெற்றிகளை தொடர்ந்து ஊபர் நிறுவனம் தற்போது மகாராஷ்டிரா மாரிடைம் போர்டு உடன் இணைந்து  படகு சவாரி செய்யும் புதிய நிறுவனத்தை தொடங்கிவுள்ளது. இந்த புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஊபர்போட் நிறுவனம், மும்பையில் ஏற்கனவே பயணிகள் பயணிக்கும் படகுகளின் வழித்தடங்களில் ஸ்பீட் படகுகளை பயன்படுத்தி கேட்வே ஆப் இந்தியா முதல் எலிஃபான்டா தீவுகள் மற்றும் மாந்த்வா ஜெட்டி வரை செல்கிறது.

இந்த வழித்தடம் மூலம் அலிபாக் மற்றும் மும்பையை இணைக்க ஊபர்போட் நிறுவனம் முயற்சிக்கிறது. மேலும் இதில் பயணிக்க 6 முதல் 8 நபர்களுக்கு ரூபாய் 5,700 க்கு ஊபர்போட்டும், 10 கும் அதிகமானவர்கள் பயணிக்க 9,500 ரூபாய் கொண்ட போட் எக்ஸ்எல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊபரின் இந்த புதிய சேவை வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

NDTV-யிடம் பேசிய பம்பாய் துறைமுக கழகத்தின் தலைவர், சஞ்சய் பாட்டியா கூறுகையில் ‘ பம்பாய் துறைமுக கழகத்துடன் இணைந்து, மும்பை நகரத்தை கடல் வழி போக்குவரத்தின் தலைமை கழகமாக மாற்றுவதே எங்களது குறிக்கோள். ஊபர் போட்டின் அறிமுகத்தின் மூலம் கடல்வழி போக்குவரத்தை திறமையானதாகவும், சவுகரியமாகவும் மாற்றவுள்ளோம். புதிய திட்டங்கள் மற்றும் முதலிட்டாளர்களுடன் இந்த முயற்சி வெற்றியாகும், இதற்கு ஊபர் போட் நிறுவனம் பெரிய பங்களிக்கும் என நம்புகிறேன்' என கூறினார்.


‘மக்கள் எளிதில் பயன்படுத்த வசதியாக இருக்கிறது போலவும், அதிகம் பயன்படுத்தப்படும் வழித்தடத்தில் கவனம் செலுத்த முயல்கிறது. மேலும் இதன் மூலம் இவ்வழிபோக்குவரத்தை விரும்பும் பயணிகளுக்காக சேவையை அதிகரிப்போம்' என பிரபஜித் சிங், தலைவர்- ஊபர் இந்தியா மற்றும் தென் ஆசியா கூறினார்.
 

.