This Article is From Jan 17, 2019

மும்பையில் 7வது நாளாக நீடிக்கும் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

மகராஷ்டிராவில் பாஜக தலைமையிலான அரசின் கூட்டணி கட்சி என்ற முறையில், சிவசேனா பிரிஹன்மும்பை மாநகராட்சியை நிர்வகித்து வருகிறது.

மும்பையில் 7வது நாளாக நீடிக்கும் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

சிவசேனா பெஸ்ட் குழும பட்ஜெட்டை மாநகராட்சி பட்ஜெட்டுடன் இணைப்பதாக வாக்குறுதியளித்தார்.

ஹைலைட்ஸ்

  • மும்பையில் 7வது நாளாக நீடிக்கும் பெஸ்ட் குழும போராட்டம்.
  • பிரசாரத்தின் போது, பட்ஜெட்களை இணைப்பதாக சிவசேனா வாக்குறுதியளித்தது.
  • ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 7வது நாளாக போராட்டம்.
Mumbai:

பெஸ்ட் குழும போராட்டமானது 7வது நாளாக நீடித்து வருகிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பெஸ்ட் குழு பட்ஜெட்டை பிரிஹன்மும்பை மாநகராட்சி பட்ஜெட்டுடன் இணைப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

மகராஷ்டிராவில் பாஜக தலைமையிலான அரசின் கூட்டணி கட்சி என்ற முறையில், சிவசேனா பிரிஹன்மும்பை மாநகராட்சியை நிர்வகித்து வருகிறது. இந்நிலையில், பெஸ்ட் குழும பட்ஜெட்டை மாநகராட்சி பட்ஜெட்டுடன் இணைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெஸ்ட் ஊழியர்கள் கடந்த 7 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

2017 தேர்தல் பிரசாரத்தின் போது, பட்ஜெட்களை இணைப்பதாக சிவசேனா வாக்குறுதியளித்தது.

மும்பையில் பேருந்து சேவைகளை இயக்கி வரும் பெஸ்ட் குழுமத்தில் பணிபுரிந்து வரும் 32,000 ஊழியர்கள் கடந்த 7-ந்தேதி நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 3200க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்கவில்லை.

பெஸ்ட் குழும பட்ஜெட்டை மாநகராட்சி பட்ஜெட்டுடன் இணைப்பது, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளில் பெஸ்ட் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உறுதியாக இருக்கும் நிலையில், இந்த பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் இன்றி தோல்வியில் முடிந்தது.

பெஸ்ட் குழுமத்தின் நிதிநிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. எனவே பெஸ்ட் குழும பட்ஜெட்டை மாநகராட்சி பட்ஜெட்டுடன் இணைத்தால், நிலைமை சீரடையும் என்று நம்புகிறேன். இது தொடர்பாக தொழிலாளர்களுக்கும் நான் உறுதி அளித்துள்ளேன் என உத்தவ் தாக்கரே கூறினார். வேலைநிறுத்தப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தான் தீர்வு காண முடியும்.

மும்பை மாநகரில் பாம்பே எலக்ட்ரிசிட்டி சப்ளை அண்டு டிரான்ஸ்போர்ட் என்னும் அமைப்பின் கீழ் அரசு பேருந்துப் போக்குவரத்து நடைபெறுகிறது. சுருக்கமாக பெஸ்ட் என்றழைக்கப்படும் இந்த நிறுவனத்தின் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏழாவது நாளாக இன்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பேருந்துகள் அனைத்தும் பணிமனைகளில் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் ஆட்டோ, கார் ஆகியவற்றில் அதிகக் கட்டணம் கொடுத்துச் செல்கின்றனர். புறநகர் ரயில்களில் வழக்கத்தைவிடப் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

.