This Article is From Jan 11, 2019

‘தாக்கரேவின் ரத்தம் உங்களுக்கு இருந்தால்…’- சூடாகும் சிவசேனா வட்டாரம்

சிவசேனாவுக்கும் பாஜக-வுக்கும் இடையில் தொடர்ந்து உரசல் போக்கு நிலவி வருகிறது.

‘தாக்கரேவின் ரத்தம் உங்களுக்கு இருந்தால்…’- சூடாகும் சிவசேனா வட்டாரம்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வும் சிவசேனாவும் தனித்துப் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக பேச்சி அடிபட்டு வருகிறது. 

Mumbai:

சில நாட்களுக்கு முன்னர் பாஜக தலைவர் அமித்ஷா, ‘வரும் தேர்தலில் நம் கூட்டணியில் முன்பு இருந்தவர்கள் விலகினால், அவர்களை இடம் தெரியாமல் ஆக்குவோம்' என்று சூளுரைத்தார். இது சிவசேனாவை குறிவைத்துச் சொன்னது என்று தேசிய அரசியல் வட்டாரங்களில் பரபரக்கப்பட்டது.

இந்நிலையில் அமித்ஷாவின் கருத்தை மேற்கோள் காட்டி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி, ஜெயந்த் பாடில் சிவசேனாவை உசுப்பேற்றும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். 

‘இன்னொரு கட்சியின் (பாஜக) தலைவர், உங்களை தவிடுபொடியாக்கி விடுவதாக எச்சரித்துள்ளார். உங்களுக்குள் பால் தாக்கரேவின் ரத்தம் ஓடிக் கொண்டிருந்தால், மகாராஷ்டிரா சட்டமன்றத்திலிருந்து நாளை வெளிநடப்புச் செய்யுங்கள்' என்று சிவசேனாவை நோக்கி பேசியுள்ளார். 

அவர் மேலும், ‘சிவசேனா, தொடர்ந்து பாஜக-வுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தாலும், அதன் தலைவர் உத்தவ் தாக்கரே சில நாட்களுக்கு முன்னர் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். எதற்காக இந்தச் சந்திப்பு நடந்தது' என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

சிவசேனாவுக்கும் பாஜக-வுக்கும் இடையில் தொடர்ந்து உரசல் போக்கு நிலவி வருகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக பேச்சி அடிபட்டு வருகிறது. 


 

.