This Article is From May 18, 2020

'பச்சை மண்டலங்களில் தொழிற்சாலைகள் திறக்கப்படும்' : மகாராஷ்டிர அரசு அறிவிப்பு!

மகாராஷ்டிராவில் 33 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. குறிப்பாக மும்பையில் மட்டும் 20 ஆயிரம்பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று புனே, தானே, நவி மும்பை, அவுரங்காபாத் ஆகிய முக்கிய நகரங்களிலும் பாதிப்பு சற்று அதிகமாக உள்ளது. 

'பச்சை மண்டலங்களில் தொழிற்சாலைகள் திறக்கப்படும்' : மகாராஷ்டிர அரசு அறிவிப்பு!

நாட்டில் 20 சதவீத கொரோனா பாதிப்பு மும்பை நகரில்தான் உள்ளது.

ஹைலைட்ஸ்

  • கொரோனா பாதிப்பு குறைந்த பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன
  • மகாராஷ்டிராவில் பச்சை மண்டல பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்வு
  • 50 ஆயிரம் தொழிற்சாலைகளை திறப்பதற்கு மகாராஷ்டிர அரசு அனுமதி
Mumbai:

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மகாராஷ்டிராவில் கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாது என்று முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் பாதிப்பு முழுவதும் இல்லாத பச்சை மண்டல பகுதிகளில், தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

பச்சை மண்டல பகுதிகளில் கொரோனா ஏற்படாமல் தடுப்பது என்பது மிகப்பெரும் சவால் என உத்தவ் தாக்கரே குறிப்பிட்டுள்ளார். இருந்தபோதிலும், பொருளாதார நலன் கருதி 50 ஆயிரம் தொழிற்சாலைகள் பச்சை மண்டலத்தில் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பொது முடக்க கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக மாநில அரசுகள் முடிவு எடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலங்களாக கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன. 

பொது முடக்கத்த்தின் மூலம் கொரோனா பரவலை முடிவுக்கு கொண்டுவர முடியாவிட்டாலும், பாதிப்பு அதிகரிப்பதை தடுக்க முடியும் என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். 

.