பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
Mumbai: மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவின் பதவியேற்பு விழா மும்பை சிவாஜி மைதானத்தில் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக திமுக தலைவர் ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்துத்துவா கொள்கையை தீவிரமாக கடைபிடிக்கும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, இன்று காவி வண்ண பட்டு குர்தாவை அணிந்து பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார். அவருடன் மனைவி ராஷ்மி, மகன் ஆதித்யா உள்ளிட்டோரும் மேடையில் அமர்ந்தனர். பதவியேற்பு விழா மேடையை பிரபல இந்தி திரைப்பட கலை இயக்குனர் நிதின் தேசாய் வடிவமைத்திருந்தார்.
உத்தவுடன், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தலா 2 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
.
At Uddhav Thackeray's swearing in ceremony, a huge crowd was seen at Mumbai's Shivaji Park.
முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ், தொழிலதிபர் முகேஷ் அம்பானி, மனைவி நீடா அம்பானி, மகன் ஆனந்த் ஆகியோரும் மேடையில் அமர்ந்திருந்தனர். உத்தவ் தாக்கரேவின் உறவினரான ராஜ் தாக்கரே பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்.
காங்கிரஸ் ஆதரவுடன் மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இருப்பினும் இவர்களில் எவரும் நேரில் கலந்து கொள்ளவில்லை.
மகாராஷ்டிராவின் முதல்வராக பொறுப்பேற்கும் நபர் உத்தவ் தாக்கரே ஆவார். இதற்கு முன்பாக சிவசேனாவை சேர்ந்த மனோகர் ஜோஷி, நாராயண் ரானே ஆகியோர் முதல்வர்களாக பொறுப்பு வகித்திருக்கின்றனர்.