This Article is From May 27, 2020

அரசியல் குழப்பம்: கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கிறார் உத்தவ் தாக்கரே!

கூட்டணி கட்சித் தலைவர்களை முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று சந்திக்க உள்ளார்.

அரசியல் குழப்பம்: கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கிறார் உத்தவ் தாக்கரே!

உத்தவ் தாக்கரேவை நேற்று முன்தினம் சரத் பவார் அவரது இல்லத்தில் சந்தித்து சென்றார். (File)

Mumbai/ New Delhi:

மகாராஷ்டிரா அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், கூட்டணி கட்சி தலைவர்களை அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று சந்திக்கிறார். முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கும், அவரது கூட்டணி கட்சி தலைவரான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவாருக்கும் இடையிலான சந்திப்புக்கு பின்னர் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக ஊகங்கள் எழுந்தன. 

எனினும், சிவசேனாவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கூட்டணியில் எந்த பிளவும் இல்லை என திட்டவட்டமாக மறுத்தனர். ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கருத்து, மகாராஷ்டிராவில் முடிவெடுப்பதில் இருந்து தன்னைத் தூர விலக்குவதாகவும், தனது கட்சிக்கு ஒரு துணைப் பாத்திரத்தை மட்டுமே குறிப்பிடுவதாகவும் உள்ளது, மேலும் சிக்கலைத் ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் மூத்த அரசியல்வாதியான சரத் பவார், நேற்று முன்தினம் மும்பையில் இருக்கும் உத்தவ் தாக்கரே வீட்டிற்கு நேரில் சென்று அவரை சந்தித்துள்ளார். அதைத் தொடர்ந்து நேற்று மகாராஷ்டிர ஆளுநரை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார் பவார். இந்த இரண்டு சந்திப்புகளின் பின்னணியும் தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா இடையிலான மோதல் போக்கின் வெளிப்பாடே என்று தகவல் ஒரு பக்கம் உலவிக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது மகாராஷ்டிராதான். இந்த நெருக்கடியால் தேசியவாத காங்கிரஸுக்கும் சிவசேனாவுக்கும் இடையில் பல்வேறு விஷயங்களில் மோதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. 

குறிப்பாக சரத் பவார், கொரோனா வைரஸ் தொற்றால் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கக் கூடாது என்றும், பொருளாதார நடவடிக்கைகளுக்கு தளர்வு அளிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் முதல்வர் உத்தவ் தாக்கரே, தொடர்ந்து முழு முடக்க நடவடிக்கையில் தளர்வு இருக்கக் கூடாது என்று நினைக்கிறார். இதனால் இருவருக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டதாக தெரிகிறது.

ஆளுநர் உடனான சந்திப்பை அடுத்து சரத் பவார், “ஆளுநரை சந்தித்தது சாதாரணமாகத்தான். மகாராஷ்டிர அரசுக்கு எந்த வித நெருக்கடியும் இல்லை. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் எங்களுடன்தான் உள்ளனர். பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் பொறுமை இழந்து வருகிறார்,” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர் நாராயண் ரானே, கொரோனா வைரஸ் பாதிப்பை சரியாக கையாள சிவசேனா அரசு தவறி விட்டது என்றும், மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். முன்னதாக அவர், மாநில கவர்னர் கோஷ்யாரியை சந்தித்து குடியரசு தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

.