This Article is From Mar 18, 2020

''தேவையில்லாமல் பயணித்தால் பஸ், ரயிலை நிறுத்தி விடுவோம்'' - உத்தவ் தாக்கரே எச்சரிக்கை!!

மக்கள் தேவையற்ற பயணங்களையும், கூட்டமாகக் கூடுவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அரசு அலுவலகங்கள் எதிர்வரும் 7 நாட்களுக்குத் தொடர்ந்து செயல்படும் என்று கூறியுள்ளார் உத்தவ் தாக்கரே.

Advertisement
இந்தியா Edited by

மகாராஷ்டிராவில் 40 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது.

Mumbai:

கொரோனா வைரஸால் நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இந்த நிலையில், அங்குள்ள மக்கள் தேவையற்ற பயணங்களை மேற்கொண்டால் பஸ், ரயில்களை நிறுத்தி விடுவோம் என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

மக்கள் தேவையற்ற பயணங்களையும், கூட்டமாகக் கூடுவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அரசு அலுவலகங்கள் எதிர்வரும் 7 நாட்களுக்குத் தொடர்ந்து செயல்படும். 

Advertisement

குறைந்தது 50 சதவீத ஊழியர்களுடன் அலுவலகங்கள் இயங்கும். இன்றைய தினம் வரையில் மகாராஷ்டிராவில் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அவர்களில் 26 பேர் ஆண்கள். 14 பேர் பெண்கள். அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்ற 39 பேரின் உடல் நிலை சீராக உள்ளது. 

Advertisement

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Advertisement