This Article is From Sep 29, 2019

Edappadi சங்கராச்சாரியாரைப் பார்த்தால் எங்க உக்காருவாரு?-குதர்க்கமாக கேள்விகேட்ட Udhayanidhi

"ஒரு மகாத்மாவுக்கு இந்த நிலைமை என்றால் சாதாரண ஆத்மாக்களான நம் நிலைமை என்ன?"- Udhayanidhi Stalin

Advertisement
தமிழ்நாடு Written by

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சங்கராச்சாரியாரைப் பார்க்க சென்றால் எங்கு அமர்வார் - Udhayanidhi Stalin

சென்னை, பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திமுக-வின் இளைஞரணிச் செயலாளுரும், மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றி குதர்க்கமாக பேசியுள்ளார். 

நிகழ்ச்சியின்போது உரையாற்றிய உதயநிதி, “1927 ஆம் ஆண்டு, சங்கராச்சாரியாரைப் பார்க்க மகாத்மா காந்தி வந்தார். அப்போது, அவரை வீட்டுக்குள் நுழையவிட்டால் தீட்டு வந்துவிடும் என்பதால், மாட்டுக் கொட்டகையில் வைத்து ஆசி வழங்கினார். இந்த சம்பவம் நடக்கும்போது மகாத்மா காந்திக்கு வயது, 58. சங்கராச்சாரியாருக்கு வயது, 34. ஒரு மகாத்மாவுக்கு இந்த நிலைமை என்றால் சாதாரண ஆத்மாக்களான நம் நிலைமை என்ன?

இதை ஏன் இப்போது சொல்கிறேன். 1927 ஆம் ஆண்டில் இதை நடந்ததாக பார்க்க வேண்டாம். இப்போதும் அதே நிலைமைதான். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சங்கராச்சாரியாரைப் பார்க்க சென்றால் எங்கு அமர்வார். அல்லது எங்கு அமரவைக்கப்படுவார். சுப்ரமணியன் சுவாமி சங்கராச்சாரியாரைப் பார்க்க சென்றால் அவர் எங்கு அமர்வார். அல்லது, எங்கு அமரவைக்கப்படுவார். இந்த பாகுபாட்டில் இருக்கும் உண்மை தெரிகிறதா இல்லையா?” எனப் பேசினார். 

Advertisement