This Article is From Jun 22, 2020

உடுமலை சங்கர் வழக்கு: தீர்ப்புக்கு இவை இரண்டும்தான் காரணம்- திருமா வேதனை!

Udumalai Sankar Case: "இது ஆணவக் கொலைகளையும் கூலிக் கலாச்சாரத்தையும் ஊக்குவிக்கும்”

உடுமலை சங்கர் வழக்கு: தீர்ப்புக்கு இவை இரண்டும்தான் காரணம்- திருமா வேதனை!

Udumalai Sankar Case: “உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை தொடர்பான மேல்முறையீடு உடனடியாக செய்யப்படவேண்டும்.

ஹைலைட்ஸ்

  • உயர் நீதிமன்றம் வழக்கில் தீர்ப்பளித்துள்ளது
  • சங்கரின் மனைவியாக இருந்த கௌசல்யா, மேல் முறையீடு செய்யப்படும் என்றுள்ளார்
  • தமிழக அரசும் வழக்கில் மேல் முறையீடு செய்யப்படும் எனத் தகவல்

உடுமலையில் 2016-ல் நடந்த சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில் திருப்பூர் நீதிமன்றம் கௌசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு மரண தண்டனை என தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட இந்த வழக்கில், தற்போது கௌசல்யாவின் தந்தையை விடுதலை செய்து   நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், மரண தண்டனை வழங்கப்பட்ட மற்ற 5 பேரின் தண்டனையை குறைத்து ஆயுள் தண்டனையாக  நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

இந்த தீர்ப்பு குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என அரசு வழக்கறிஞர் எமிலியாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். சங்கரின் மனைவியாக இருந்த கவுசல்யா, வழக்கில் மேல் முறையீடு செய்து சட்டப் போராட்டத்தைத் தொடர உள்ளதாக தெரிவித்துள்ளார். 

வழக்கில் வந்த தீர்ப்பு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், “ உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் முதன்மைக் குற்றவாளிகள் விடுதலையாகியுள்ளனர். உயர் நீதிமன்றத் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கென தனிச் சட்டம் இல்லாமையும் அரசுத் தரப்பு வாதம் வலுவாக இல்லை என்பதுவுமே இந்தத் தீர்ப்புக்குக் காரணங்களாகும். இது ஆணவக் கொலைகளையும் கூலிக் கலாச்சாரத்தையும் ஊக்குவிக்கும்” என வேதனைப்பட்டுள்ளார். 

மேலும் அவர், “உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை தொடர்பான மேல்முறையீடு உடனடியாக செய்யப்படவேண்டும்; ஆணவக் கொலைகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்; ஆணவக் கொலை தொடர்பான மசோதாவை மத்திய அரசு அவசரச் சட்டமாகப் பிறப்பிக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்” எனக் கூறியுள்ளார். 

.