Read in English
This Article is From Oct 17, 2018

நீட் யு.ஜி. 2019 தேர்வுகளுக்கு நவம்பரில் பதிவு தொடக்கம்

தேர்வுக்கு பதிவு செய்ய ஆதார் எண் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisement
Education

நீட் தொடர்பான அறிவிக்கை nta.ac.in என்ற இணைய தளத்தில் வெளியாகும்

New Delhi:

2019-ல் நடைபெறவுள்ள நீட் தேர்வுகள் வரும் 2019 மே 5-ம் தேதி தொடங்குகின்றன. இதற்கு நவம்பர் 1-ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை நீட் தேர்வுகளை சி.பி.எஸ்.சி. நடத்தி வந்தது. அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வை என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வு நிறுவனம் நடத்தவுள்ளது.

மத்திய அரசால் அங்கீகார் செய்யப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்/பி.டி.எஸ் போன்ற படிப்புகளில் சேர்வதற்காக நீட் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

நீட் தேர்வுகளை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க என்.டி.ஏ. திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, அதனை ஆண்டுக்கு 2 கட்டங்களாக கம்ப்யூட்டர் மூலம் நடத்தி முடிப்பதற்கு மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் முனைப்பு காட்டுகிறது.

Advertisement

அவ்வாறு ஆண்டுக்கு 2 நீட் தேர்வுகளை நடத்தினால் அது மாணவர்களுக்கு கூடுதல் நெருக்கடியை அளிக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கருதுகிறது.

வரவிருக்கும் நீட் தேர்வானது கடந்த மே மாதம் நடத்தப்பட்டதைப் போன்று பேப்பர் மற்றும் பேனா மூலம் நடைபெறுகிறது. இதற்கு பதிவு செய்யவும், தேர்வில் பங்கேற்கவும் ஆதார் எண் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Advertisement

 

Advertisement