New Delhi:
2018-ம் ஆண்டுக்கான் யூ.ஜி.சி நெட் தேர்வுக்கான அட்மிட் கார்ட், சி.பி.எஸ்.இயின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஜூலை 8-ம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இந்த ஆண்டு தேர்வில் 3 தாள்களுக்கு பதில் இரண்டு தாள்கள் மட்டுமே இருக்கும். தேர்வு நேரம் 3 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.
முதல் தாள் பொது அறிவு கேள்விகள் கொண்டிருக்கும். ஒரு கேள்விக்கு 2 மதிப்பெண்கள் வீதம் 50 கேள்விகள் கேட்கப்படும். 50 கேள்விகளையும் கட்டாயம் எழுத வேண்டும். முதல் தாளுக்கு ஒரு மணி நேரம் அவகாசம் வழங்கப்படும்.
இரண்டாம் தாள், குறிப்பிட்ட பாடம் பொருத்த கேள்விகளாக இருக்கும். 2 மதிப்பெண்கள் வீதம் 100 கேள்வுகளுக்கு கட்டாயம் பதிலளிக்க வேண்டும். இதற்கு 2 மணிநேரம் அவகாசம் வழங்கப்படும்.
எப்படி பதிவிறக்கம் செய்வது?
www.cbsenet.nic.in என்ற நெட் தேர்வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், 'Download Admit Card' என்ற லிங்கை கிளிக் செய்யவும். பின், கேட்க்கப்படும் தகவல்களைக் கொடுத்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த உடன், அதில் இருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். ஏதேனும் தவறு இருந்தால், உடனே தேர்வுக் குழுவை தொடர்பு கொள்ளுங்கள்.