புதிதாக மேம்படுத்தப்பட்ட யுஜிசி -கேர் பட்டியலை மானியக்குழு அறிவித்துள்ளது.
New Delhi: பேராசிரியர்களின் தேர்வு, பதவி உயர்வு என்பது எண்களின் அடிப்படையில் இல்லாமல் தரத்தின் அடிப்படையில் இருக்க வேண்டுமென யூஜிசி அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் உயர்கல்வியினை ஒழுங்குபடுத்தும் பல்கலைக்கழக மானிய ஆணையம் (யூஜிசி) தன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கல்லூரிகள், தேர்வுகள், பதவி உயர்வு, கடன் ஒதுக்கீடு மற்றும் ஆராய்ச்சி பட்டங்களை வழங்குவது போன்றவற்றில் தரத்தினை உறுதி படுத்துமாறு கேட்டுக் கொண்டது. வெறும் எண்களைக் காட்டிலும் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளின் தரத்தின் அடிப்படையில் அவை இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
“புதிதாக மேம்படுத்தப்பட்ட யுஜிசி -கேர் பட்டியலை மானியக்குழு அறிவித்துள்ளது. அப்பட்டியலில் யூஜிசி அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கைகளின் பட்டியலை ஜுன் 14,2019 அன்று கல்வி நோக்கத்திற்காக மாற்றியுள்ளது”
துணை வேந்தர்கள், தேர்வுக் குழுக்கள், ஸ்கிரீனிங் குழுக்கள், ஆராய்ச்சி மேற்பார்வையாளர்கள் மற்றும் கல்வி/ செயல்திறன் மதிப்பீடு மற்றும் மதிப்பீட்டில் ஈடுபட்டுள்ள பேராசிரியர்கள், பேராசிரியர்களை தேர்வு செய்யும் விதம், அவர்களுக்கான பதவி உயர்வு, கடன் ஒதுக்கீடு, விருது போன்றவற்றில் அவர்களின் முடிவுகளை உறுதிபடுத்த இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆராய்ச்சி பட்டங்கள் வெறும் எண்களைக் காட்டிலும் அவை வெளியிடப்பட்ட படைப்புகளின் தரத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டுமென அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.