This Article is From Jun 07, 2019

காலிப்பணியிடங்களை நிரப்பாவிட்டால் அங்கீகாரம் ரத்து: யூஜிசி கறார்

காலிப்பணியிடங்களை பணி நியமன விதிகளின் படியும் வெளிப்படைத்தன்மையுடனும் நிரப்பப்பட வேண்டும் என்று யூஜிசி தெரிவித்துள்ளது.

காலிப்பணியிடங்களை நிரப்பாவிட்டால் அங்கீகாரம் ரத்து: யூஜிசி கறார்

காலிப்பணியிடங்களை 6 மாதத்திற்குள் நிரப்ப வேண்டுமென அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

New Delhi:

கல்லூரிகள், பல்கலைக்கழங்கங்கள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழங்களில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை 6 மாதங்களுள் நிரப்ப வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு கெடு விதித்துள்ளது. 

பல்கலைக்கழக மானிய குழு என்றழைக்கப்படும் யூஜிசி வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட வழிகாட்டுதல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. பேராசிரியர் பற்றாக்குறையால் மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பல்கலைக்கழக மானியத்தின் கீழ் 5 ஆயிரம் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும் யூஜிசியின் மேற்பார்வையில் நாடு முழுவதும் 900 பல்கலைக்கழங்களும் 40 ஆயிரம் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இவற்றில் உள்ள காலிப்பணியிடங்களை 6 மாதத்திற்குள் நிரப்ப வேண்டுமென அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்களை பணி நியமன விதிகளின் படியும் வெளிப்படைத்தன்மையுடனும் நிரப்பப்பட வேண்டும் என்று யூஜிசி தெரிவித்துள்ளது. மேலும் 6 மாதங்களுக்குள் காலிப்பணியிடங்களை நிரப்பாத பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் யூஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.

.