Read in English
This Article is From May 24, 2019

பிரெக்ஸிட் விவகாரம் : கண்ணீர் மல்க ராஜினாமாவை அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் தெரசா மே!

கன்சர்வேட்டிவ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள தெரசா மே, அடுத்த தலைவர் தேர்வு செய்யப்படும் வரையில் பொறுப்பில் நீடிப்பதாக தெரிவித்துள்ளார்.

Advertisement
உலகம் Edited by

ஜூன் 7-ம்தேதியுடன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார்.

London:

பிரிட்டன் பிரதமர் தெரசா மே தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே அறிவித்துள்ளார். புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரையில் பதவியில் நீடிப்பதாக அவர் கூறியுள்ளார்.

பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பாக கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரும், பிரிட்டன் பிரதமருமான தெரசா மே புதிய கொள்கையை கொண்டு வந்தார். இது கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கும், எம்.பி.க்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 

இந்தநிலையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் மூத்த பெண் அமைச்சர் ஆன்ட்ரியா, தெரசா மேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் தொடர்ச்சியாக கட்சி தலைவர் பொறுப்பு மற்றும் பிரதமர் ஆகிய 2 பதவிகளில் இருந்தும் தெரசா மே ராஜினாமா செய்யவேண்டும் என்று எதிர்ப்புகள் வலுத்தன. 

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தெரசா மே, கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பொறுப்பை ராஜினமா செய்வதாக கண்ணீர் மல்க அறிவித்தார். அடுத்த தலைவர் தேர்வு செய்யப்படும் வரையில் பொறுப்பில் நீடிப்பதாக தெரசா அறிவித்திருக்கிறார். 

Advertisement

அடுத்த தலைவர் இன்னும் ஒரு சில வாரங்களில் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 7-ம்தேதியில் இருந்து கட்சி தலைவர் பொறுப்பில் நீடிக்க மாட்டேன் என்று தெரசா மே அறிவித்திருக்கிறார். 

Advertisement