பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்டுள்ளார்
ஹைலைட்ஸ்
- போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்டுள்ளார்
- ஐரோப்பிய நாடுகளில் இறப்பவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை
- இருப்பினும் ஜான்சன் சுயநினைவுடன் தான் இருக்கின்றார்
London, United Kingdom: கொரோனவை எதிர்த்து போராடி வந்த நிலையில், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். கொரோனா நோய் தொற்று காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இறப்பவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு வருகின்றது. இந்நிலையில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஜான்சன், அவரது வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப்பை தற்போது தனக்கு பதிலாக நியமித்துள்ளார். இருப்பினும் ஜான்சன் சுயநினைவுடன் தான் இருக்கின்றார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு ஐரோப்பாவில் வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, அமெரிக்காவிலும் 10,000-ஐ கடந்ததால் இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உலகம் முழுக்க 1.32 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் உலகளவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 73,000 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் அட்லாண்டிக்கின் இருபுறத்திலும் இருந்து வரும் எச்சரிக்கையினால், தாங்கள் மிகெப்பெரிய சவாலை எதிர்நோக்கியுள்ளதாக ஜெர்மன் நாட்டின் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கூறினார். அதே சமயம் 1941ம் ஆண்டு நடந்த பேர்ள் துறைமுகத் தாக்குதல் போன்ற ஒரு தாக்குதலுக்கு அமெரிக்கா தன்னை தயார் செய்துகொள்ளவேண்டும் என்று அமெரிக்கா அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பாவில் சாத்தியமான திருப்புமுனையின் அறிகுறிகளாக தற்போது தினசரி வைரஸ் தொற்றால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருகிறது. அதே சமயம் பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய இரு நாடுகளிலும் நேற்று இறப்புக்கள் அதிகரித்துள்ளன, பிரான்சில் 833 மற்றும் இத்தாலியில் 636 பேர் இறந்துள்ளனர். மேலும் "இந்த தொற்றுநோயின் முடிவை நிலையை நாம் இன்னும் நாம் எட்டவில்லை" என்று பிரான்சின் சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன் கூறியுள்ளார். இது ஒருபுறம் இருக்க, இந்த நோயால் பாதிக்கப்பட்டு 10 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரிட்டனின் 55 வயதான பிரதமரால் இந்த நோயினை எதிர்கொள்ள முடியவில்லை.
பிரிட்டன் நாட்டில் இறப்பு எண்ணிக்கை 5,000-க்கு அதிகமாக இருப்பதால் நேற்று ஜான்சன் தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதுகுறித்து வெளியான தகவலில், சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மதியத்திற்கு மேல் பிரதமரின் உடல்நிலை மோசமடைந்ததால் அவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றியதாக கூறப்படுகிறது. உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பாதிப்பினை பதிவு செய்துள்ள அமெரிக்காவில் நிலைமை இன்னும் சகஜ நிலைக்கு திரும்பவில்லை. "மேலும் இது பெரும்பாலான அமெரிக்கர்களின் வாழ்க்கையை கடிமானதாகவும் சோகமானதாகவும் மற்றும் சோகமான வாரமாக இருக்கும் என்று ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார், அமெரிக்க அறுவை சிகிச்சை பிரிவின் ஜெனரல் 'ஜெரோம் ஆடம்ஸ்'.
நியூயார்க் நகர ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ, கடந்த இரண்டு நாட்களாக தினசரி இறப்புகள் குறைந்து வருவதாகவும், இருப்பினும் இது நெருக்கடி நிலையின் உச்சமாக இருக்கலாம் என்றும் கூறினார். மேலும் இது நாம் கவனக்குறைவாக இருக்கும் நேரமில்லை என்றும் தெரிவித்தார். இதற்கிடையில், வாஷிங்டனில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் "Light at the end of the tunnel." என்று ட்வீட் செய்துள்ளார்.
இந்த தொற்றுநோய் கிட்டத்தட்ட உலகத்தின் ஒவ்வொரு மூலையையும் சென்றடைந்துள்ளது, மனிதகுலத்தின் பாதி அளவை தங்கள் வீடுகளுக்குள் முடக்க்கியுள்ளது. நான்கு பில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றி இருக்கிறது இந்த கொரோனா என்று ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இந்நிலையில் தொடர்ச்சியாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் தங்கள் நகரில் உள்ள மருத்துவமனைகளில் 'சிக்கலான சூழல்' நிலவுவதாக ஜப்பான் நாட்டு பிரதமர் ஷின்சோ அபே கூறியுள்ளார். அதே போல ஒரு மாத காலத்திற்கும் மேலாக நாட்டில் நிலவும் ஊரடங்கினாள், இத்தாலியும் வரலாறு காணாத அளவிற்கு சுமார் 430 பில்லியன் டாலர் அளவிலான ஊக்கத்தொகையை அறிவித்துள்ளது.
உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில், பொருளாதார மையமான மும்பையில் உள்ள ஒரு பெரிய தனியார் மருத்துவமனையில் 26 செவிலியர்கள் மற்றும் மூன்று மருத்துவர்களுக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அந்த இடம் மூடப்பட்டது. 1.3 பில்லியன் மக்கள்தொகையில் இந்தியா இதுவரை 4,000 கொரோனா வைரஸ் வழக்குகளைப் பதிவு செய்துள்ளது, ஆனால் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கக்கூடும் என்றும், மிக குறைவான அளவிலேயே மக்கள் சோதிக்கப்பட்டுள்ளதாகவும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.