This Article is From Sep 11, 2018

இந்திய கோடீஸ்வரரின் மகள்தான் இங்கிலாந்தின் ஆடம்பரமான மாணவி – ஊடகங்களில் பரபரப்பு

சில மாதங்களுக்கு முன்பாக அந்த கோடீஸ்வர பெண்ணுக்கு உதவியாளர்களை கேட்டு செய்தித் தாளில் விளம்பரம் கொடுத்தார்களாம்

இந்திய கோடீஸ்வரரின் மகள்தான் இங்கிலாந்தின் ஆடம்பரமான மாணவி – ஊடகங்களில் பரபரப்பு

ஆடம்பரம் மிக்க இந்திய மாணவி படிக்கும் செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலை கழகம்

லண்டன்:இந்தியாவை சேர்ந்த மிகப்பெரும் கோடீஸ்வரரின் மகள் ஒருவர் இங்கிலாந்தில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக் கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவியாக கல்வி பயின்று வருகிறார். இங்கிலாந்திலேயே அவர்தான் அதிக ஆடம்பரம் மிக்க மாணவி என்று பத்திரிகைகளும், ஊடகங்களும் செய்தி வெளியிட்டு வருகின்றன.

அவர் யார் என்ற விவரத்தை தங்களுக்கு அனுப்பி வைக்குமாறு ஊடகங்கள் ஒரு போட்டியையும் நடத்த தொடங்கியுள்ளன.

அந்த மாணவி தங்கி பயில்வதற்காக ஒரு தனி மேன்ஷனையே 4 ஆண்டுகளுக்கு வாடகைக்கு எடுத்துள்ளனர். அவருக்கு பணியாளர்களாக 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

அவர்களில் பணிப்பெண், வீட்டு வேலை செய்பவர், தோட்டக்காரர், பாதுகாவலர்கள், சமையல்காரர் உள்ளிட்டோர் அடங்குவர்.

சில மாதங்களுக்கு முன்பாக அந்த கோடீஸ்வர பெண்ணுக்கு உதவியாளர்களை கேட்டு செய்தித் தாளில் விளம்பரம் கொடுத்தார்களாம். பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஆண்டுக்கு 30 பவுண்ட் (ரூ. 28 லட்சம்) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆடம்பர மாணவிக்கு கதவை திறந்து விடுவதற்காகவே ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். உணவு பரிமாற 3 பேர், கார் ஓட்டுனர் உள்ளிட்டோரும் பணியாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

.