This Article is From Jan 08, 2020

Iran-இலிருந்து 176 பேருடன் டேக்-ஆஃப் ஆன விமானம் விபத்து; அனைவரும் பலி: ரிப்போர்ட்!

தெஹ்ரானிலிருந்து விபத்துக்கு உள்ளான விமானம் கீவ் நோக்கி டேக்-ஆஃப் ஆனதாக ஐஆர்என்ஏ கூறுகிறது. 

Iran-இலிருந்து 176 பேருடன் டேக்-ஆஃப் ஆன விமானம் விபத்து; அனைவரும் பலி: ரிப்போர்ட்!

உக்ரைன் சர்வதேச ஏர்லைன்ஸைச் சேர்ந்த போயிங் 737 விமானம்தான் விபத்துக்கு உள்ளானது.

Dubai:

ஈரான் நாட்டின் தெஹ்ரானில் உள்ள இமாம் கொமையினி விமான நிலையத்திலிருந்து சுமார் 170 பயணிகளுடன் டேக்-ஆஃப் ஆன உக்ரைன் நாட்டு விமானம், விபத்துக்கு உள்ளானது. இது குறித்த தகவலை ஈரானின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது. விமானத்தில் இருந்ததாக சொல்லப்படும் 176 பேரும் இந்த விபத்து காரணமாக உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

உக்ரைன் சர்வதேச ஏர்லைன்ஸைச் சேர்ந்த போயிங் 737 விமானம்தான் விபத்துக்கு உள்ளானது. விபத்தைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளனவாம். 

விமானத்திலிருந்த அனைவரும் உயிரிழந்திருக்கக்கூடும் என்று ஈரான் நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. விமான நிர்வாகத்தின் செய்திப்படி இத்தகவலை தெரிவித்துள்ளது ஈரான் அரசு. ஆனால் விமான நிர்வாகத்திடமிருந்து இன்னும் அதிகாரபூர்வ அறிக்கையோ விளக்கமோ வரவில்லை.

"விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து நாங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தோம். ஆனால், தீ கட்டுக்கடங்காமல் எரிந்து கொண்டிருந்தது. அதனால், எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. சம்பவ இடத்தில் 22 ஆம்புலன்ஸ், 4 பஸ் ஆம்புலன்ஸ் மற்றும் ஒரு ஹெலிகாப்ட்டர் உள்ளது," என்று ஈரான் அவசரகால சேவைகள் அமைப்பின் தலைவர், பிர்ஹோசைன் கோலிவாந்த் கூறியுள்ளார்.

தெஹ்ரானிலிருந்து விபத்துக்கு உள்ளான விமானம் கீவ் நோக்கி டேக்-ஆஃப் ஆனதாக ஐஆர்என்ஏ கூறுகிறது. 


 

.