இந்த விபத்து தொடர்பான விசாரணைக்கு தேசிய போக்குவரத்து வாரியம் அங்கீகாரம் பெற்ற பிரதிநிதியை நியமித்துள்ளதாக போக்குவரத்து விபத்துகளை விசாரிக்கும் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. (Reuters)
New York, US: ஈரானில் விபத்துக்குள்ளான உக்ரேன் விமானம் தொடர்பான விசாரணையில் இணையப்போவதாக அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பான தனது ட்வீட்டர் கணக்கில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், புதன்கிழமையன்று ஏற்பட்ட விமான விபத்து தொடர்பாக ஈரானிடமிருந்து முறையான அறிவிப்பு வந்ததாக போக்குரவத்து வாரியம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட போயிங் 737 விமானம், தெஹ்ரானில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது, ஈராக்கில் உள்ள அமெரிக்க படை தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் நடந்த சிறிது நேரத்திலேயே உக்ரைன் விமானம் விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்து தொடர்பான விசாரணைக்கு தேசிய போக்குவரத்து வாரியம் அங்கீகாரம் பெற்ற பிரதிநிதியை நியமித்துள்ளதாக போக்குவரத்து விபத்துகளை விசாரிக்கும் அமெரிக்க வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
ஈரானில் உக்ரைன் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 176 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த உக்ரைன் விமானம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா, கனடா நாடுகளுக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.
தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விபத்து நடந்த நேரத்தில் சுற்றியுள்ள நிலைமை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறது.