Read in English
This Article is From Jul 22, 2020

நாடு முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கையை 5 சதகவிகிதமாக குறைப்பதே இறுதி நோக்கம்!: சுகாதாரத்துறை

“நாடு COVID நெருக்கடியை ஒப்பீட்டளவில் சிறப்பாகக் கையாண்டுள்ளது. மத்திய அரசு மாநிலங்களுக்கு ஆதரவளிக்கிறது. மத்திய அரசின் அணிகள் மாநிலங்களுக்கு ஆலோசனை வழங்குகின்றன, மேலும் அவர்களின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க மாநிலங்களுக்கு சென்றுள்ளன.” என மத்திய அரசு இன்று தெரிவித்திருந்தது.

Advertisement
இந்தியா Edited by

Highlights

  • இறப்பு விகிதமானது 2.43 சதவீதமாகக் குறைந்துள்ளது.
  • கடந்த 24 மணி நேரத்தில் 3.34 லட்சம் கொரோனா வைரஸ் சோதனைகள் நடத்தப்பட்டன
  • கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 37,148 பேருக்கு கொரோனா
New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 11.55 லட்சத்தினை கடந்திருக்கக்கூடிய நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் செய்தியாளர்களை சந்தித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறையின் செய்தியாளர் சந்திப்பின் முக்கிய அம்சங்கள்:

நாடு முழுவதும் சோதனைகளை அதிகப்படுத்துவும், பாசிடிவ் நோயாளிகளின் எண்ணிக்கையை 5 சதவிகிதமாக குறைப்பதே தற்போதைய நோக்கம்.

தற்போதைய சூழலில் 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கையானது, ஒட்டு மொத்த தேசிய சராசரியை விடை குறைவு.

Advertisement

தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதமானது 2.43 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இந்த இறப்பு விகிதம் குறைப்பின் பாராட்டுக்கள் எல்லாம் மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களையே சேரும்.

Advertisement

ஏப்ரல் 23 முதல் கணக்கிடப்பட்ட ஒட்டுமொத்த சராசரி 8 சதவீதமாகும்.

இன்று காலை நிலவரப்படி நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3.34 லட்சம் கொரோனா வைரஸ் சோதனைகள் நடத்தப்பட்டன. இது ஒரு வாரத்திற்கு முன்பு 2.87 ஆகவும், இரண்டு வாரங்களுக்கு முன்பு 2.41 ஆகவும், நான்கு வாரங்களுக்கு முன்பு இருந்த 1.87 ஆகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

பரிசோதனைகள் அதிகரிப்பதால் தொடர்ச்சியாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 37,148 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கு முந்தைய நாளில் 40,000க்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

Advertisement

இந்தியாவில் இதுவரை 28,084 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

“நாடு COVID நெருக்கடியை ஒப்பீட்டளவில் சிறப்பாகக் கையாண்டுள்ளது. மத்திய அரசு மாநிலங்களுக்கு ஆதரவளிக்கிறது. மத்திய அரசின் அணிகள் மாநிலங்களுக்கு ஆலோசனை வழங்குகின்றன, மேலும் அவர்களின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க மாநிலங்களுக்கு சென்றுள்ளன.” என மத்திய அரசு இன்று தெரிவித்திருந்தது.

Advertisement

Advertisement