Read in English
This Article is From Jul 25, 2020

”நான் தூக்கு மேடைக்கு அனுப்பப்பட்டால், நான் ஆசீர்வதிக்கப்படுவேன்”: பாஜக பெண் தலைவர் அதிரடி!!

ஆகஸ்ட் 5 அன்று அயோத்தியில் அடிக்கல் நாட்டு விழாவும், பூமி பூஜையும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
இந்தியா Posted by
New Delhi:

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக தலைவர்களுள் ஒருவரான உமா பாரதி, ஒரு வேளை நான் தூக்கு மேடைக்கு அனுப்பப்பட்டால், நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக இருக்கிறேன் என அர்த்தம் என என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தனது தரப்பு வாதத்தினை சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் வீடியோ இணைப்பு வாயிலாக சமீபத்தில் பதிவு செய்துள்ளார்.

முன்னதாக இவர்களை வழக்கிலிருந்து ரேபரேலி சிறப்பு நீதிமன்றம் விடுவித்து தீர்பளித்திருந்தது. பின்னர் இந்த தீர்ப்பினை அலகாபாத் நீதிமன்றமும் உறுதி செய்திருந்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கின் போக்கை மாற்றி, விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு எவ்வித முகாந்திரமும் இல்லையெனக் கூறி, இந்த வழக்கை மறு விசாரணையாக தினந்தோறும் நடத்தி இரண்டு ஆண்டுகளுக்குள் வழக்கை முடிக்க உத்தரவிட்டது. இந்நிலையில், நீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பினை ஆகஸ்ட் 31 க்குள் வழங்க வேண்டும்.

Advertisement

சில நாட்களுக்கு முன்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவார், “ராமர் கோயிலைக் கட்டினால் கொரோனா போய்விடும் என சிலர் கருதுகின்றனர்.” என்கிற விமர்சனத்தை மத்திய அரசின் மீது சூசமாக வைத்திருந்தார். இது குறித்து உமா பாரதி, “இரண்டு விஷயங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஒரு முழு அமைப்பும் கொரோனா உடன் போராடுகிறார்கள். சுகாதார அமைப்பு தனி, கோயிலை கட்டியெழுப்பும் அமைப்பு தனி. பவாரின் கூற்றுகளில் நான் வேறு அர்த்தத்தைக் காண்கிறேன் ... சிலர் இவை அனைத்தும் அதிக பிரச்னை இல்லாமல் நடக்கிறது என்று கவலைப்படுகிறார்கள். மோடி-ஜி அயோத்தியில் இருக்கும்போது 'ஸ்ரீ ராம் ஜெய் ராம்' பாடுமாறு பவார்-ஜியை நான் கேட்க விரும்புகிறேன்.” என பாரதி தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 5 அன்று அயோத்தியில் அடிக்கல் நாட்டு விழாவும், பூமி பூஜையும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement