ஆப்கன் பேச்சுவார்த்தையில் மத்திய அரசின் பங்கு குறித்து உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
Jammu: ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலை நிறுத்துவதற்காக ரஷ்யா சர்வதேச அளவில் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதையொட்டி, ரஷ்யா தலைமையில் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்குமாறு இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்திருந்தது. இதனை ஏற்று இந்தியா சார்பில் 2 பிரதிநிதிகள் ரஷ்யா மாநாட்டில் பங்கேற்றனர்.
இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மத்திய அரசை விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர், “சம்பந்தமே இல்லாத தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் மோடி அரசு ஆர்வம் காட்டுகிறது. இந்த ஆர்வத்தை பிரச்னைக்குரிய காஷ்மீர் பிரிவினைவாதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த ஏன் காட்டவில்லை என்று கூறியுள்ளார்.