This Article is From Mar 21, 2019

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு எந்த இடம் தெரியுமா?

உலகின் பணக்கார நாடாக இருந்தும் அமெரிக்காவிற்கு இதில் கிடைத்திருக்கும் இடம் 19.

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு எந்த இடம் தெரியுமா?

சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு இந்தியா பட்டியலில் பின் தங்கியுள்ளது

United Nations:

 உலகம் முழுவதும் மார்ச் 20 ஆம் தேதி உலக மகிழ்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஐ.நா, மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகள் என்கின்ற ஓர் ஆய்வு செய்து, முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அந்தப் பட்டியலில் சென்ற ஆண்டு 133வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு 140வது இடத்திற்கு சரிந்துள்ளது.

வருமானம், சுதந்திரம், நம்பிக்கை, ஆரோக்கியமான வாழ்வு, சமுதாய உதவி மற்றும் உதவி செய்யும் தன்மை என ஆறு அளவுகோள்களை கணக்கில் கொண்டுதான் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது ஐ.நா.

மேலும் உலகம் முழுவதும் சோகம், வெறுப்பு முதலியவை சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாகவே உள்ளது என அந்த ரிப்போர்ட் தெரிவிக்கிறது.

உலகின் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து மற்றும் நெதர்லாந்து உள்ளன.

பாகிஸ்தான் 67வது இடத்திலும் சீனா 93வது இடத்திலும் பங்களாதேஷ் 125வது இடத்திலும் உள்ளன.

கடைசி இடத்தில் தெற்கு சுடான் உள்ளது. அதற்கு முந்தைய இடங்களில் மத்திய ஆப்ரிக்கன் ஜனநாயகம், ஆப்கானிஸ்தான், டான்சானியா மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகள் உள்ளது.

உலகின் பணக்கார நாடாக இருந்தும் அமெரிக்காவிற்கு இதில் கிடைத்திருக்கும் இடம் 19.  

 

Click for more trending news


.