This Article is From Mar 01, 2020

பிரதமர் மோடியின் கீழ், நாடு "செயல்திறன் மிக்க பாதுகாப்பு கொள்கையை" கொண்டுள்ளது: அமித் ஷா

தற்போது ​​மோடி-ஜி பிரதமரான பிறகு, வெளியுறவுக் கொள்கையிலிருந்து மாறுபட்ட ஒரு செயல்திறன் மிக்க பாதுகாப்புக் கொள்கையை நாங்கள் உருவாக்கியுள்ளோம், "என்று அவர் கூறினார்,

பிரதமர் மோடியின் கீழ், நாடு

Union Home Minister Amit Shah spoke at an event of the NSG in Kolkata today.

Kolkata:

இந்த வாரத் தொடக்கத்தில் 43 உயிர்களைக் கொன்ற டெல்லியில் நடந்த மூன்று நாள் வன்முறையின் பின்னணியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இவ்வாறு பேசியிருக்கிறார்.

கொல்கத்தாவில் இன்று நடந்த தேசியப் பாதுகாப்புப் படை (என்.எஸ்.ஜி) நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா "தேசத்தைப் பிளவுபடுத்தி அதன் அமைதியை நிறுத்த விரும்பும்" பிரிவினைவாதிகள் மத்தியில் தேசியப் பாதுகாப்பு காவலர்கள் அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் "பிரிவினைவாதிகள் மேலும் உருவாகுவார்களேயானால், அவர்களை எதிர்த்துப் போராடித் தோற்கடிப்பது என்.எஸ்.ஜியின் பொறுப்பாகும்" என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், தற்போது ​​மோடி-ஜி பிரதமரான பிறகு, வெளியுறவுக் கொள்கையிலிருந்து மாறுபட்ட ஒரு செயல்திறன் மிக்க பாதுகாப்புக் கொள்கையை நாங்கள் உருவாக்கியுள்ளோம், "என்று அவர் கூறினார், மேலும், இந்தியா தற்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளின் ‘லீக்' உடன் இணைந்து சர்ஜிக்கல் ஸ்டைரைக் மேற்கொண்டுள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார்.

"நாங்கள் முழு உலகிலும் அமைதியை விரும்புகிறோம். 10,000 ஆண்டுக்கால நமது வரலாற்றில், இந்தியா ஒருபோதும் யாரையும் தாக்கவில்லை. எங்கள் அமைதியைச் சீர்குலைக்க விரும்பும் யாரையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம், வீரர்களின் உயிரைப் பறிக்கும் எவரும் மிகப்பெரிய விலையினை செலுத்த வேண்டியிருக்கும்" என்று அவர் கூறினார்.

தன்னுடைய தலைமைக்கு எதிரான விமர்சனங்களுக்கு மத்தியில் இன்று காலை கொல்கத்தாவில் இறங்கிய அமித் ஷா, ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் நகராட்சித் தேர்தலுக்கான பாஜகவின் பிரச்சாரத்தைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நகரின் மையத்தில் இன்று மாலை நடைபெறும் ஒரு பேரணியில் வன்முறை குறித்தான அமித் ஷாவின் உரையானது அனைவர் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது

வாரிய தேர்வுகள் நடைபெறுகிற காரணத்தினால் அங்கு அரசியல் நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. இந்த சூழலில் பேரணியை அனுமதித்ததற்காக அம்மாநிலத்தின் எதிர்க்கட்சியான சிபிஎம் மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சிகள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை விமர்சித்திருக்கின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை புவனேஸ்வரில் நடந்த கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டத்தில் மம்தா, அமித் ஷாவை சந்தித்தபோது டெல்லி மோதல்கள் குறித்துக் கண்டிக்க தவறியதற்காக எதிர்க்கட்சிகள் முதல்வர் மம்தாவை விமர்சித்திருந்தன.

முன்னதாக என்.எஸ்.ஜி நிகழ்வில் அமைச்சர், மும்பை தாக்குதலுக்கு பிறகு என்.எஸ்.ஜி வலையமைப்பை விரிவுபடுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். "என்.எஸ்.ஜி முழு நாட்டிலும் அதன் இருப்பை படிப்படியாக நிரூபித்துள்ளது. தற்போது இந்த அமைப்பின், ஒருங்கிணைப்பானது மேலும் சிறப்பாக இருக்கும்" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.             

.