This Article is From Apr 04, 2019

அரியவகை செஹுவென்காஸ் தவளைகளை அதிகரிக்க செய்யும் முயற்சி!

15 வருட ஆயுட்காலம் கொண்ட ரோமியோவின் இனத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த இனப்பெருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரியவகை செஹுவென்காஸ் தவளைகளை  அதிகரிக்க செய்யும் முயற்சி!

பொலிவியன் காடுகளில் கண்டெடுக்கப்பட்ட செஹுவென்காஸ் தண்ணீர் தவளைகள் ரோமியோ மற்றும் ஜூலியட் அக்வேரியத்தில் தங்க வைக்கப்பட்டன.

La Paz:

ஒரு இனத்தின் வாழ்வியல் ஒரு காதல் கதையில் புரிந்துவிடும்.

பொலிவியன் காடுகளில் கண்டெடுக்கப்பட்ட செஹுவென்காஸ் தண்ணீர் தவளைகள் ரோமியோ மற்றும் ஜூலியட் அக்வேரியத்தில் தங்க வைக்கப்பட்டன.

உலக வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு நியோட்ரோபிக்ஸ் பகுதியில் வாழும் அரிய வகை தவளைகளின் இனத்தை பெருக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

2017ம் ஆண்டிலிருந்து ரோமியோ அக்வேரியத்தில் இருக்கிறது. அதிலிருந்து இப்போதுதான் இனப்பெருக்கத்துக்கான முன்னெடுப்பை எடுத்துள்ளது. 

பொலிவியாவின் ஹெர்பெடாலஜி துறை தலைமை அதிகாரி கூறும்போது "ஜூலியட்டிடம், ரோமியோ அன்பாக நடந்து கொள்கிறது. சூடான உணவை விட்டுதருகிறது" என்றார்.

நீண்ட நாட்களாக தனியாக இருந்து வந்த ரோமியோ, ஜூலியட்டோடு நெருங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார். 15 வருட ஆயுட்காலம் கொண்ட ரோமியோவின் இனத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த இனப்பெருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

tjj2sv68

முதல் நாளில் ரோமியோ மற்றும் ஜூலியர் 15 நிமிடங்கள் இணைந்திருந்தன. ரோமியோ சரியான நிலையில் முட்டையிடுவதற்கான நிலையில் இனபெருக்க நடவடிக்கையில் ஈடுபட்டது. இருவாழ்வில்களில் 10வது பெரிய டைவர்சிட்டியாக பொலிவியோ உள்ளது. ஆனால் 22 சதவிகித இனம் தற்போது அழியும் சூழலை சந்தித்துள்ளது.

இந்த வகை தவளைகள் தண்ணீரில் இனப்பெருக்கம் செய்யும் அல்லது மலைகளில் உள்ள நீர்நிலைகளில் இனப்பெருக்கம் செய்யும். 

பருவநிலை மாற்றம் இந்த அரியவகை உயிரினங்களை பெரிதும் பாதிக்கிறது.

.