மோடி அரசு 2-வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில் முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளது.
New Delhi: இந்தியாவில் 17 சுற்றுலாத் தலங்களை உலகத் தரம் வாய்ந்தவையாக மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
அவர் தனது உரையில் 'இந்தியாவில் 17 இடங்களை உலகத் தரம் வாய்ந்ததாக மேம்படுத்தவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த இடங்கள் முற்றிலும் டிஜிட்டல் மயப்படுத்தப்படும்' என்றார்.
முன்னதாக நேற்று பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு துறைகளை வலுப்படுத்த வேண்டும் என்றும், சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறைக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி வறுமை ஒழிப்பை கொண்டுவர முடியும் என்றும் பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.