நடப்பாண்டி மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ளது.
New Delhi: மகாத்மா காந்தி தகவல் களஞ்சியம் ஏற்படுத்தப்படும் என்று பட்ஜெட் உரையில் நிதியமமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் காந்தியின் 150-வது பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
விக்கி பீடியாவைப் போன்று ஏற்படுத்தப்படவுள்ள காந்திபீடியா செயல்படும். இதனை உலகம் முழுவதும் உள்ளவர்கள் எடிட் செய்து கொள்ள முடியும். இந்த வலை தளத்தை எப்படி ஏற்படுத்த வேண்டும் என்பது குறித்த ஆலோசனைகளை அனைவரும் தெரிவிக்கலாம்.
பொருளாதார ஆய்வறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ண மூர்த்தி சுப்ரமணியன் காந்தியின் பொன் மொழியை மேற்கோள் காட்டினார்.
உலக அளவில் வேகமாக வளரும் நாடுகள் பட்டியலில் முதலிடத்தை இந்தியா இழந்திருக்கிறது. இந்த சூழலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார்.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.8 சதவீதமாக மார்ச் காலாண்டில் குறைந்துள்ளது. பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது.
5 ஆண்டுகளுக்கு முன்பாக பொருளாதார அளவுகோல்படி உலக அளவில் இந்தியா 11-வது இடத்தில் இருந்தது. இன்றைக்கு 6-வது இடத்திற்கு முன்னேறி உள்ளதாக நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார்.