Budget 2019 India: நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும்
மோடியின் தலைமையிலான அரசு சமீபத்தில் ஆட்சி அமைத்தது. மோடியின் அரசு தரப்பில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதில் வரி குறித்தான முக்கிய அறிக்கைகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி – மார்ச் காலத்தில் வளர்ச்சி 5.8 சதவிகிதமாக இருந்தது. 20 காலாண்டுகளில் குறைந்த வளர்ச்சி இதுவாகும். பொருளாதார சர்வேயில், பிரதமர் மோடி அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஐந்து ட்ரில்லியன் டாலர் குறிக்கோளை முன் வைத்தார். இதனை அடைய ஆண்டிற்கு 10 சதவிகிதம் வளர்ச்சியானது தேவையகும்.
பட்ஜெட் 2019: பட்ஜெட் விவசாயிகளுக்கு உதவும், பிரதமர் மோடி
பட்ஜெட்டில் உள்ள திட்டங்கள் 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க உதவும். வரி நடைமுறைகள் இந்த பட்ஜெட் மூலம் மேலும் சுலபமாக்கப்படும். உட்கட்டமைப்பு வசதிகள் நவீனமயமாக்கப்படும்- பிரதமர் மோடி கருத்து
பட்ஜெட் 2019: ‘அனைத்துத் துறைக்குமான பட்ஜெட்’- அருண் ஜெட்லி
2019-20 பட்ஜெட்டை சிறப்பாக தாக்கல் செய்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு வாழ்த்துகள். வளர்ச்சிக்காக மட்டும் அல்லாமல், அனைத்துத் துறைகளுக்குமான பட்ஜெட்டாக இது இருக்கிறது- முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பேச்சு
மத்திய பட்ஜெட் 2019: அமித்ஷா கருத்து
புதிய இந்தியாவுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இது அனைவருக்குமான பட்ஜெட். இந்த பட்ஜெட், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் ஏழைகளின் கனவை நனவாக்கும் வகையில் அமைந்துள்ளது- அமித்ஷா
பட்ஜெட் 2019: ஸ்டார்ட்-அப்ஸ்கள் குறித்த அறிவிப்பு!
ஆங்கில் வரி தொடர்பாக இருக்கும் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், வருமான வரி செலுத்தும் முதலீட்டாளர்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படாது. இதன் மூலம் முதலீட்டாளர்கள் குறித்த விபரம் மற்றும் நிதி எங்கிருந்து வருகிறது என்பதற்கான சந்தேகங்கள் போக்கப்படும்- பட்ஜெட்டில் அறிவிப்பு
மத்திய பட்ஜெட் 2019: தங்கத்துக்கான வரி உயர்த்தப்படுகிறது!
தங்கம் மீதான சுங்க வரி 10 சதவிகிதமாக உள்ளது. இது 12.5 சதவிகிதமாக அதிகரிக்கப்படும்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
பட்ஜெட் 2019: நிதிப் பற்றாக்குறை குறைந்துள்ளது!
நாட்டின் நிதிப் பாற்றாக்குறை 3.3 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது முன்னர், 3.4 சதவிகிதமாக இருந்தது- நிதி அமைச்சர்
பட்ஜெட் உரை லைவ்: அதிக வருவாய் ஈட்டுவோருக்கான வரி நிலவரம்
2 முதல் 5 கோடி ரூபாய் வரை வருமான வரி ஈட்டுவோருக்கான வரி, 3 சதவிகிதமாக இருக்கும். 5 கோடி ரூபாய்க்கு அதிகமாக வருமானம் ஈட்டுவோருக்கு 7 சதவிகிதம் வரி விதிக்கப்படும்- நிதி அமைச்சர்
பட்ஜெட் 2019: பெட்ரோல், டீசல் வரி உயர்வு!
பெட்ரோல், டீசலுக்குக் கூடுதலாக லிட்டருக்கு 1 ரூபாய் வரி விதிக்கப்படும்.- நிதி அமைச்சர்
பட்ஜெட் 2019: தனி நபர் வரி உச்சவரம்பில் மாற்றமில்லை!
5 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டும் தனி நபர்களுக்கு வருமான வரி விதிக்கப்படாது என்று முன்னரே இந்த அரசு தெரிவித்திருந்தது. அது தொடரும்- நிதி அமைச்சர்
பட்ஜெட் 2019: 120 கோடி இந்தியர்களிடம் ஆதார் கார்டு!
நிதி அமைச்சர்: நாட்டில் 120 கோடி பேரிடம் ஆதார் கார்டு உள்ளது. பான் கார்டுக்கு பதிலாக ஆதார் கார்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.
பட்ஜெட் 2019: நேரடி வரி வசூல் அதிகரித்துள்ளது!
"நேரடி வரி வசூலானது 78 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2013-14 ஆம் ஆண்டில் 6.38 லட்சம் கோடியாக இருந்த நேரடி வரி வசூல், 2018 ஆம் ஆண்டில் 11.37 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது"- நிதி அமைச்சர்
பட்ஜெட் 2019: புதிய நாணங்கள் புழக்கத்துக்கு வரும்!
"பார்வையற்றோரும் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் உள்ள ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.20 ஆகிய நாணயங்களை பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் 7 ஆம் தேதி அறிமுகம் செய்தார். அவரை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்குப் புழக்கத்தில் விடப்படும்"- நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய பட்ஜெட் 2019: மின்சார வாகனங்களுக்கு வரிக் குறைப்பு!
"மின்சார வாகனங்களுக்கு தற்போது இருக்கும் 12 சதவிகித ஜி.எஸ்.டி வரியை, 5 சதவிகிதமாகக் குறைக்கச் சொல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது. இது மட்டுமல்லாமல், மின்சார வாகனங்களை சுலபமாக வாங்க, கடன் வாங்கும் நபர்களுக்குக் கூடுதலாக 1.5 லட்ச ரூபாய் வருமான வரி குறைக்கப்படும்"- நிதி அமைச்சர்
பட்ஜெட் லைவ்: கார்ப்பரேட் வரி உயர்த்தப்பட்டது!
நாட்டில் 400 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 25 சதவிகிதமாக வரி உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் 2019: சர்வதேசக் கடன் குறைவாக உள்ளது!
"இந்தியாவின் சர்வதேசக் கடன், நாட்டின் ஜிடிபி-யில் 5 சதவிகிதம்தான் உள்ளது. இது உலக அளவை ஒப்பிட்டுப் பார்க்கையில் மிகவும் குறைவாகும்"- நிதி அமைச்சர்
பட்ஜெட் 2019 லைவ்: என்.ஆர்.ஐ-களுக்கு ஆதார் வழங்குவதில் மாற்றம்
"நாட்டில் வசிக்காத இந்தியர்களுக்கு ஆதார் கார்டு கொடுக்கும் விதத்தில் மாற்றம் செய்யப்படும். அவர்கள் நாட்டுக்குத் திரும்பிய பின்னர் 180 நாட்கள் கழித்து ஆதார் கார்டு வழங்கும் நடைமுறை மாற்றப்படும். உடனடியாக ஆதார் கார்டு வழங்க வழிவகை செய்யப்படும்"- நிதி அமைச்சர்
பட்ஜெட் 2019 லைவ்: ‘பேட் லோன்ஸ்’ திரும்பப் பெறுதல்
"வங்கித் துறையில் நிலவும் சுணக்கங்களை சரிசெய்தால், நிதி சார்ந்த பலன்கள் கிடைக்கும் என்பது இப்போது தெளிவாகியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் என்.பி.ஏ கடன்கள் 4 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. அது 1 லட்ச ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இது ஒரு சாதனையாகும்."
மத்திய பட்ஜெட் 2019: ஹைலைட்ஸ்!
-நடைமுறையில் இருக்கும் பல்வேறு தொழிலாளர் சட்டங்கள், 4 பிரிவுகளாக முறைபடுத்தப்படும்.
-உயர்கல்வியை பலப்படுத்த சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
-கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டில், விளையாட்டு வீரர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்
-ஸ்டார்ட்-அப்ஸ்களுக்கு தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும். இந்த நிகழ்ச்சியை வடிவமைப்பது மற்றும் நடத்துவதும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களாகவே இருக்கும்.
பட்ஜெட் 2019: அக்டோபர் 2 முதல் ‘திறந்தவெளி மலம் கழித்தல்’ இருக்காது!
"வரும் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி முதல் இந்தியாவில் திறந்தவெளி மலம் கழித்தல் இருக்காது என்பதை மனநிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பிரதமரின் கனவாகும்"- நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
பட்ஜெட் லைவ்: உயர்கல்வியை பலப்படுத்தல்!
"5 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலிருக்கும் ஒரு உயர்கல்வி நிறுவனங்கள் கூட, உலகின் டாப் 200 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இடம் பெறவில்லை. ஆனால், தொடர் முயற்சியால் தற்போது 3 கல்வி நிறுவனங்கள் அதில் இடம் பிடித்துள்ளன. வெளிநாட்டு மாணவர்களை இந்தியாவுக்கு வரவழைக்கும் வகையில் 'இந்தியாவில் படியுங்கள்' என்ற திட்டத்தை முன்மொழிகிறேன்."- நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
பட்ஜெட் 2019: ‘தூய்மை இந்தியா’ திட்டம் விரிவுபடுத்தல்
"2014, அக்டோபர் 2 ஆம் தேதி முதல் 9.6 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. 5.6 லட்சம் கிராமங்களில் திறந்தெவெளி மலம் கழித்தல் ஒழிக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றியானது தொடர வேண்டும். எனவே, தூய்மை இந்தியா திட்டத்தை விரிவுபடுத்த கூடுதல் நிதி ஒதுக்கப்படும்"- நிதி அமைச்சர்
பட்ஜெட் 2019: 2022 ஆம் ஆண்டுக்குள் கிராமப்புறங்களில் அனைவருக்கும் மின்சாரம்.
வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கிராமப்புறங்களில் வசிக்கும் அனைவருக்கும் மின்சார வசதி செய்து தரப்படும். 2024 ஆம் ஆண்டுக்குள் தண்ணீர் வசதி செய்து தரப்படும்- நிர்மலா சீதாராமன்
மத்திய பட்ஜெட் 2019: விண்வெளித் துறையில் புதிய நிறுவனம்!
விண்வெளித் துறையில் இந்திய முன்னிலையில் இருக்கிறது. அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய இடத்தில் இருக்கிறோம். அதற்கென்று என்.எஸ்.ஐ.எல் (நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட்) என்று நிறுவனம் ஆரம்பிக்கப்படும்.
பட்ஜெட் 2019: ஊடகம் மற்றும் விமானத் துறையில் எப்.டி.ஐ அதிகரிப்பு!
"ஊடகம் மற்றும் விமானத் துறையில் வெளிநாட்டு முதலீடு வரம்பு அதிகரிக்கப்படும். உட்கட்டமைப்புத் துறையில் 100 சதவிகித வெளிநாட்டு முதலீடுக்கு அனுமதி அளிக்கப்படும். உலக அளவில் வெளிநாட்டு முதலீடு தொடர்ந்து சரிந்து வந்தாலும், இந்தியாவில் ஏற்றம் கண்டுள்ளது"- நிதி அமைச்சர்
பட்ஜெட் 2019: வாடகை வீடுகளுக்கான சிறப்புத் திட்டங்கள்
"தற்போது வாடகைக்காக விடப்படும் இடங்கள் குறித்து நடைமுறையில் இருக்கும் சட்டங்கள் பழமையானவை. விரைவில் இதற்கான புதிய சட்டம் வகுக்கப்படும். இந்த விஷயத்தில் பல சீர்திருத்தங்கள் செய்யப்படும்"- நிதி அமைச்சர்
பட்ஜெட் 2019: பெரும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கை
"இந்திய நாட்டு மக்கள் நம் நாட்டின் எதிர்காலத்துக்காக இரண்டு விஷயங்களை முன்னிருத்தியுள்ளார்கள். தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியே அவை. 657 கிலோ மீட்டர் அளவிலான மெட்ரோ ரயில் நெட்வோர்க் செயல்பாட்டில் உள்ளது"- நிர்மலா சீதாராமன்
இந்த ஆண்டு 3 ட்ரில்லியன் டாலர் பொருளாதரத்தை இந்தியா அடையும் - நிர்மலா சீதாராமன்
1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய இந்தியாவிற்கு 55 ஆண்டுகள் ஆகின. நாங்கள் 5 ஆண்டுகளில் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய செய்தோம். - நிர்மலா சீதாராமன்
'புது இந்தியாவிற்கான துவக்கம் இந்த பட்ஜெட்' - நிர்மலா சீதாராமன்
பிரதமர் மோடி பாராளுமன்றத்தை வந்தடைந்தார். அவரது தலைமையில் அமைக்கப்பட்ட இரண்டாவது அரசின் முதல் பட்ஜெட் இதுவாகும்
நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பெற்றோர்கள் பாராளுமன்றம் வந்தடைந்துள்ளனர்.
காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதற்காக பாராளுமன்றத்திற்கு பட்ஜெட் காப்பிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
பெட்டியில் வைத்து தான் பட்ஜெட் பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவது வழக்கம். இம்முறை பெட்டிக்கு பதிலாக நிர்மலா சீதாராமன் சிகப்பு நிற பைல் போன்ற ஒன்றை வைத்துள்ளார்.
'பொருளாதார சர்வேயில் இருக்கும் பல முக்கிய அம்சங்கள் பட்ஜெட்டிலும் இடம் பெறும் என நம்புகிறேன்' என்றார் கே சுப்பிரமணியம்.
பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முன்பு ஜனாதிபதியை சந்தித்தார் மத்தியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த ஆண்டு வளர்ச்சி 7 சதவிகிதத்தை அடையும் என எண்ணப்படுகிறது. ஆனால் அதற்கு பல தடைகளை தாண்ட வேண்டியது வரும்.
சென்ற மோடி அரசில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார் நிர்மலா சீதாராமன். அருண் ஜெட்லி நிதிதுறையை பார்த்து கொண்டார். இம்முறை மத்திரி சபையில் இடம்பெறவில்லை அருண் ஜெட்லி. அதனால் நிதிதுறை அமைச்சராக செயல்படுகிறார் நிர்மலா சீதாராமன்.
சில பொருளாதார வல்லுநர்கள், வருமான வரி உச்ச வரம்பை மத்தியரசு உயர்த்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.
சென்ற என்டிஏ ஆட்சியில் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் இந்த முறை என்டிஏ ஆட்சியில் நிதிதுறை அமைச்சராக உள்ளார்.