Read in English
This Article is From Jul 05, 2019

பட்ஜெட் 2019 லைவ்: பெட்ரோல், டீசலுக்குக் கூடுதலாக லிட்டருக்கு 1 ரூபாய் வரி விதிக்கப்படும்- நிதி அமைச்சர்!

Advertisement

Budget 2019 India: நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும்

மோடியின் தலைமையிலான அரசு சமீபத்தில் ஆட்சி அமைத்தது. மோடியின் அரசு தரப்பில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதில் வரி குறித்தான முக்கிய அறிக்கைகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஜனவரி – மார்ச் காலத்தில் வளர்ச்சி 5.8 சதவிகிதமாக இருந்தது. 20 காலாண்டுகளில் குறைந்த வளர்ச்சி இதுவாகும். பொருளாதார சர்வேயில், பிரதமர் மோடி அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஐந்து ட்ரில்லியன் டாலர் குறிக்கோளை முன் வைத்தார். இதனை அடைய ஆண்டிற்கு 10 சதவிகிதம் வளர்ச்சியானது தேவையகும்.

Jul 05, 2019 15:03 (IST)
பட்ஜெட் 2019: பட்ஜெட் விவசாயிகளுக்கு உதவும், பிரதமர் மோடி

பட்ஜெட்டில் உள்ள திட்டங்கள் 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க உதவும். வரி நடைமுறைகள் இந்த பட்ஜெட் மூலம் மேலும் சுலபமாக்கப்படும். உட்கட்டமைப்பு வசதிகள் நவீனமயமாக்கப்படும்- பிரதமர் மோடி கருத்து
Jul 05, 2019 15:00 (IST)
பட்ஜெட் 2019: ‘அனைத்துத் துறைக்குமான பட்ஜெட்’- அருண் ஜெட்லி

2019-20 பட்ஜெட்டை சிறப்பாக தாக்கல் செய்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு வாழ்த்துகள். வளர்ச்சிக்காக மட்டும் அல்லாமல், அனைத்துத் துறைகளுக்குமான பட்ஜெட்டாக இது இருக்கிறது- முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பேச்சு
Jul 05, 2019 14:57 (IST)
மத்திய பட்ஜெட் 2019: அமித்ஷா கருத்து

புதிய இந்தியாவுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இது அனைவருக்குமான பட்ஜெட். இந்த பட்ஜெட், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் ஏழைகளின் கனவை நனவாக்கும் வகையில் அமைந்துள்ளது- அமித்ஷா
Jul 05, 2019 14:55 (IST)
பட்ஜெட் 2019: ஸ்டார்ட்-அப்ஸ்கள் குறித்த அறிவிப்பு!

ஆங்கில் வரி தொடர்பாக இருக்கும் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், வருமான வரி செலுத்தும் முதலீட்டாளர்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படாது. இதன் மூலம் முதலீட்டாளர்கள் குறித்த விபரம் மற்றும் நிதி எங்கிருந்து வருகிறது என்பதற்கான சந்தேகங்கள் போக்கப்படும்- பட்ஜெட்டில் அறிவிப்பு
Jul 05, 2019 13:27 (IST)
மத்திய பட்ஜெட் 2019: தங்கத்துக்கான வரி உயர்த்தப்படுகிறது!

தங்கம் மீதான சுங்க வரி 10 சதவிகிதமாக உள்ளது. இது 12.5 சதவிகிதமாக அதிகரிக்கப்படும்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
Advertisement
Jul 05, 2019 13:24 (IST)
பட்ஜெட் 2019: நிதிப் பற்றாக்குறை குறைந்துள்ளது!

நாட்டின் நிதிப் பாற்றாக்குறை 3.3 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது முன்னர், 3.4 சதவிகிதமாக இருந்தது- நிதி அமைச்சர்
Jul 05, 2019 13:20 (IST)
பட்ஜெட் உரை லைவ்: அதிக வருவாய் ஈட்டுவோருக்கான வரி நிலவரம்

2 முதல் 5 கோடி ரூபாய் வரை வருமான வரி ஈட்டுவோருக்கான வரி, 3 சதவிகிதமாக இருக்கும். 5 கோடி ரூபாய்க்கு அதிகமாக வருமானம் ஈட்டுவோருக்கு 7 சதவிகிதம் வரி விதிக்கப்படும்- நிதி அமைச்சர்
Jul 05, 2019 13:15 (IST)
பட்ஜெட் 2019: பெட்ரோல், டீசல் வரி உயர்வு!

பெட்ரோல், டீசலுக்குக் கூடுதலாக லிட்டருக்கு 1 ரூபாய் வரி விதிக்கப்படும்.- நிதி அமைச்சர்
Jul 05, 2019 13:13 (IST)
பட்ஜெட் 2019: தனி நபர் வரி உச்சவரம்பில் மாற்றமில்லை!

5 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டும் தனி நபர்களுக்கு வருமான வரி விதிக்கப்படாது என்று முன்னரே இந்த அரசு தெரிவித்திருந்தது. அது தொடரும்- நிதி அமைச்சர்
Jul 05, 2019 13:01 (IST)
பட்ஜெட் 2019: 120 கோடி இந்தியர்களிடம் ஆதார் கார்டு!

நிதி அமைச்சர்: நாட்டில் 120 கோடி பேரிடம் ஆதார் கார்டு உள்ளது. பான் கார்டுக்கு பதிலாக ஆதார் கார்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.
Jul 05, 2019 12:59 (IST)
பட்ஜெட் 2019: நேரடி வரி வசூல் அதிகரித்துள்ளது!

"நேரடி வரி வசூலானது 78 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2013-14 ஆம் ஆண்டில் 6.38 லட்சம் கோடியாக இருந்த நேரடி வரி வசூல், 2018 ஆம் ஆண்டில் 11.37 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது"- நிதி அமைச்சர்
Jul 05, 2019 12:56 (IST)
பட்ஜெட் 2019: புதிய நாணங்கள் புழக்கத்துக்கு வரும்!

"பார்வையற்றோரும் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் உள்ள ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.20 ஆகிய நாணயங்களை பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் 7 ஆம் தேதி அறிமுகம் செய்தார். அவரை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்குப் புழக்கத்தில் விடப்படும்"- நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
Jul 05, 2019 12:52 (IST)
மத்திய பட்ஜெட் 2019: மின்சார வாகனங்களுக்கு வரிக் குறைப்பு!

"மின்சார வாகனங்களுக்கு தற்போது இருக்கும் 12 சதவிகித ஜி.எஸ்.டி வரியை, 5 சதவிகிதமாகக் குறைக்கச் சொல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது. இது மட்டுமல்லாமல், மின்சார வாகனங்களை சுலபமாக வாங்க, கடன் வாங்கும் நபர்களுக்குக் கூடுதலாக 1.5 லட்ச ரூபாய் வருமான வரி குறைக்கப்படும்"- நிதி அமைச்சர்
Jul 05, 2019 12:48 (IST)
பட்ஜெட் லைவ்: கார்ப்பரேட் வரி உயர்த்தப்பட்டது!

நாட்டில் 400 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 25 சதவிகிதமாக வரி உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Jul 05, 2019 12:46 (IST)
பட்ஜெட் 2019: சர்வதேசக் கடன் குறைவாக உள்ளது!

"இந்தியாவின் சர்வதேசக் கடன், நாட்டின் ஜிடிபி-யில் 5 சதவிகிதம்தான் உள்ளது. இது உலக அளவை ஒப்பிட்டுப் பார்க்கையில் மிகவும் குறைவாகும்"- நிதி அமைச்சர்
Jul 05, 2019 12:33 (IST)
பட்ஜெட் 2019 லைவ்: என்.ஆர்.ஐ-களுக்கு ஆதார் வழங்குவதில் மாற்றம்

"நாட்டில் வசிக்காத இந்தியர்களுக்கு ஆதார் கார்டு கொடுக்கும் விதத்தில் மாற்றம் செய்யப்படும். அவர்கள் நாட்டுக்குத் திரும்பிய பின்னர் 180 நாட்கள் கழித்து ஆதார் கார்டு வழங்கும் நடைமுறை மாற்றப்படும். உடனடியாக ஆதார் கார்டு வழங்க வழிவகை செய்யப்படும்"- நிதி அமைச்சர்
Jul 05, 2019 12:29 (IST)
பட்ஜெட் 2019 லைவ்: ‘பேட் லோன்ஸ்’ திரும்பப் பெறுதல்

"வங்கித் துறையில் நிலவும் சுணக்கங்களை சரிசெய்தால், நிதி சார்ந்த பலன்கள் கிடைக்கும் என்பது இப்போது தெளிவாகியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் என்.பி.ஏ கடன்கள் 4 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. அது 1 லட்ச ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இது ஒரு சாதனையாகும்."
Jul 05, 2019 12:20 (IST)
மத்திய பட்ஜெட் 2019: ஹைலைட்ஸ்!

-நடைமுறையில் இருக்கும் பல்வேறு தொழிலாளர் சட்டங்கள், 4 பிரிவுகளாக முறைபடுத்தப்படும். 

-உயர்கல்வியை பலப்படுத்த சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் 

-கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டில், விளையாட்டு வீரர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் 

-ஸ்டார்ட்-அப்ஸ்களுக்கு தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும். இந்த நிகழ்ச்சியை வடிவமைப்பது மற்றும் நடத்துவதும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களாகவே இருக்கும்.
Jul 05, 2019 12:15 (IST)
பட்ஜெட் 2019: அக்டோபர் 2 முதல் ‘திறந்தவெளி மலம் கழித்தல்’ இருக்காது!

"வரும் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி முதல் இந்தியாவில் திறந்தவெளி மலம் கழித்தல் இருக்காது என்பதை மனநிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பிரதமரின் கனவாகும்"- நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
Jul 05, 2019 12:09 (IST)
பட்ஜெட் லைவ்: உயர்கல்வியை பலப்படுத்தல்!

"5 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலிருக்கும் ஒரு உயர்கல்வி நிறுவனங்கள் கூட, உலகின் டாப் 200 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இடம் பெறவில்லை. ஆனால், தொடர் முயற்சியால் தற்போது 3 கல்வி நிறுவனங்கள் அதில் இடம் பிடித்துள்ளன. வெளிநாட்டு மாணவர்களை இந்தியாவுக்கு வரவழைக்கும் வகையில் 'இந்தியாவில் படியுங்கள்' என்ற திட்டத்தை முன்மொழிகிறேன்."- நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்



Advertisement