சுமார் 10 லட்சம் ஓட்டு மெஷின்கள் இந்த மக்களவை தேர்தலில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
New Delhi: நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்காக மட்டும் ரூ. 4 ஆயிரம் கோடிக்கு ஓட்டு மெஷின்களை மத்திய அரசு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக கடந்த ஏப்ரல் 11-ம்தேதி தொடங்கி மே 19-ம்தேதி முடிந்தது. இதில் 10 லட்சம் வாக்குப்பதிவு எந்திரங்களும், அதற்கு இணையான விவிபாட் எந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. முதன்முறையாக அதிக எண்ணிக்கையில் விவிபாட் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது இந்த தேர்தலில்தான்.
இதில், ஓட்டு மெஷின் மற்றும் விவிபாட் எந்திரங்களை வாங்குவதற்காக ரூ. 3,901.17 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. 2018-19 பட்ஜெட்டில் மக்களவை தேர்தலுக்காக ரூ. ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருந்தது.
மக்களவை தேர்தலின்போதுதான் வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத் தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்றன.