செலுவினங்களை அதிகரிப்பதற்காக நாட்டில் வரி செலுத்துவோருக்கான வரிச்சலுகைகள் குறைக்கப்பட்டுள்ளன.
New Delhi: வெளிநாடுகளில் வரி செலுத்தாத வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு (என்ஆர்ஐ.களுக்கு) இனி இந்தியாவில் வரி விதிக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு நபர் என்ஆர்ஐ என வகைப்படுத்த முன்னர் 182 நாட்கள் வெளிநாட்டில் இருந்தால் போதுமானதாக இருந்த நிலையில், தற்போது, 240 நாட்கள் வெளிநாட்டில் இருக்க வேண்டும் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
2020-2021 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 6-ஐ திருத்தி பட்ஜெட் முன்மொழியப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியா குடிமகனான ஒரு தனிநபர் அவரது உறைவிடம் அல்லது குடியிருப்பு போன்ற காரணங்களால், அவருக்கு வேறு எந்த நாட்டிலோ அல்லது பிரதேசத்திலோ வரி விதிக்கப்படவில்லை என்றால், முந்தைய ஆண்டுகளில் அவர் இந்தியாவில் வசித்தவர் என்று கருதப்படுவர்.
நாட்டின் வரிவிதிப்பு முறைமையில் உள்ள ஓட்டைகளை மக்கள் பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்கும் வகையில் என்ஆர்ஐ.களுக்கான விதிமுறைகள் மாற்றியமைக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி, முன்னதாக ஒரு இந்திய குடிமகன் 182 நாட்களுக்கு மேல் நாட்டை விட்டு வெளியே இருந்தால் அவர் என்ஆர்ஐ ஆகிவிடுவார். ஆனால், இனி அவர் 241 நாட்கள் இருக்கும் பட்சத்திலே என்ஆர்ஐ.ஆக கருதப்படுவார்.
பல சந்தர்பங்களில், சிலர் எந்த நாட்டிலும் வசிப்பவர்கள் என்பதை கண்டறிந்தோம். அதனால், எந்தவொரு நபரும் இந்திய குடிமகனாக இருந்தாலும், இந்திய குடிமகனாக இல்லாவிட்டாலும், அவரது உலகளாவிய வருமானத்திற்கு வரி விதிக்கப்படும் என வருவாய் செயலாளர் அஜய் பூஷன் பாண்டே பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
இதேபோல், ஒரு தனிநபர் 182 நாட்கள் இந்தியாவில் தங்கியிருந்தால், அவர் தற்போது இந்திய குடியிருப்பாளராக கருதப்படுவார். உண்மையில் இந்தியாவில் இருந்து கணிசமான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சில தனிநபர்கள் இந்தியாவில் தங்கியிருக்கும் காலத்தை நிர்வகிக்கிறார்கள், இதனால் அவர்கள் ஒரு குடியிருப்பாளராக நிரந்தரமாக இருக்க வேண்டும், மேலும் இந்தியாவில் தங்கள் உலகளாவிய வருமானத்தை அறிவிக்க தேவையில்லை" என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் இந்தியாவுக்கு மற்ற நாட்டு மக்கள் வருவதைத் தடுக்கும் என்றும் இதனால், சிலர் இந்திய குடியுரிமையை விட்டுக்கொடுப்பதைப் பற்றி கூட நினைக்கலாம் என்று இந்த நடவடிக்கைகள் நிச்சயம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் பரிவர்த்தனை சதுக்கத்தின் நிறுவனர் கிரிஷ் வான்வரி சுட்டிகாட்டினார்.
ஐக்கிய அரபு அமிரகம், பனாமா மற்றும் பஹாமாஸ் உட்பட பல நாடுகளில் குடியிருப்பாளர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(With inputs from PTI)