பட்ஜெட் வரலாற்றில் மிக நீளமான ஒன்றாக இருந்த போதும் அதில் எந்த விஷமும் இல்லை
New Delhi: கடந்த சனிக்கிழமை இந்த நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இதனை அடுத்து இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார் ராகுல் காந்தி அவர்கள்.
இந்த பதிவில் “நிதி அமைச்சரே, எனது கேள்விகளை கண்டு அஞ்ச வேண்டாம். இந்திய நாட்டின் இளைஞர்கள் சார்பில் தான், நான் இந்த கேள்வியை கேட்கிறேன். அவர்களுக்கு பதிலளிக்க வேண்டியது உங்கள் கடமை. இந்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வேண்டும், ஆனால் அதை அளிக்க உங்கள் அரசு தவறிவிட்டது என்று ஹிந்தியில் எழுதியிருந்தார்.
அடுத்த மாதம் டெல்லியில் நடக்கவிருக்கும் தேர்தலை நினைவில் கொண்டு காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில், வேலையில்லா இளங்கலை பட்டதாரிகளுக்கு மாதம் ஐந்தாயிரம் ரூபாயும், வேலையில்லா முதுகலை பட்டதாரிகளுக்கு 7500 ரூபாயும் மாதம் தோறும் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று தனது இரண்டாவது மற்றும் பட்ஜெட் வரலாற்றில் மிக நீளமான பட்ஜெட்டை அறிவித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன், வேலையில்லா திண்டாட்டத்தை அனுபவித்து வரும் இளைஞர்களுக்கு எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை என்று ராகுல் தெரிவித்துள்ளார். இதில் இருந்து பிரதமர் மோடி அவர்களுக்கும், நிதி அமைச்சர் அவர்களுக்கு அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது தெரிவில்லை என்பது தெளிவாக தெரிகிறது என்றும் கூறினார்.
பட்ஜெட் வரலாற்றில் மிக நீளமான ஒன்றாக இருந்த போதும் அதில் எந்த விஷமும் இல்லை, நாட்டின் முக்கிய பிரச்சனையாக திகழும் வேலையில்லா திண்டாட்டத்தை பற்றி ஏதும் பேசவில்லை, மொத்தத்தில் தந்திர பேச்சுகளை தவிர அந்த அறிவிப்பில் வேறெதுவும் இல்லை என்பதே எனது கருத்து என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார்.