This Article is From Mar 04, 2020

''சர்வதேச விமானங்களில் வரும் அனைத்து பயணிகளிடமும் சோதனை'' - மத்திய அரசு தகவல்

Coronavirus outbreak : டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருத்துவ வார்டுகள் குறித்து மாநில சுகாதார அமைச்சருடன் மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் ஆய்வு மேற்கொண்டார்.

''சர்வதேச விமானங்களில் வரும் அனைத்து பயணிகளிடமும் சோதனை'' - மத்திய அரசு தகவல்

விமான நிலையங்களில் 5.89 லட்சம் பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது
  • விமான நிலையங்களில் 5.89 லட்சம்பேரிடம் சோதனை நடத்தப்பட்டுள்ளது
  • நேபாள எல்லையில் 10 லட்சம்பேரிடம் மருத்துவ ஆய்வு செய்யப்பட்டுள்ளது
New Delhi:

இந்தியாவுக்கு சர்வதேச விமானங்களில் வரும் அனைத்து பயணிகளிடமும் மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என்று கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இதுவரையில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக 12 வெளிநாடுகளை சேர்ந்த விமானங்களில் வரும் பயணிகளிடம் மட்டுமே கொரோனா மருத்துவ சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், அனைத்து சர்வதேச விமானங்களில் இந்தியா வரும் பயணிகள் அனைவரிடமும் மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, டெல்லியில் செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாநில அமைச்சருடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் ஆலோசனை நடத்தினார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள 28 பேரில் ஒருவர் டெல்லியை சேர்ந்தவர். ஆக்ராவை சேர்ந்த அவரது உறவினர்கள் 6 பேருக்கும், இத்தாலியர்கள் 16 பேருக்கும், அவரது இந்திய கார் டிரைவர் ஒருவருக்கும், தெலங்கானாவில் ஒருவருக்கும், கேரளாவில் 3 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

தற்போது வரை இந்திய விமான நிலையங்களில் 5.89 லட்சம் பேரிடம் மருத்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நேபாள எல்லையில் மட்டும் 10 லட்சம் பேரிடம் மருத்து ஆய்வு செய்யப்பட்டது. அவர்களில் 27 ஆயிரம் பேர் கண்காணிப்பில் உள்ளனர். 

.