This Article is From Jun 26, 2020

’அரசியலுக்கு பொருத்தமற்றவர்’: ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்த மத்திய அமைச்சர்!

பதவியை காப்பாற்ற காங்கிரஸ் நாட்டில் அவசரநிலை பிரகடனத்தை அமல்படுத்தியது. 

’அரசியலுக்கு பொருத்தமற்றவர்’: ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்த மத்திய அமைச்சர்!

’அரசியலுக்கு பொருத்தமற்றவர்’: ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்த மத்திய அமைச்சர்!

ஹைலைட்ஸ்

  • ’அரசியலுக்கு பொருத்தமற்றவர்’: ராகுல் காந்தி - மத்திய அமைச்சர் விமர்சனம்
  • காங்கிரஸ் செய்த அட்டூழியங்கள் குறித்து ராகுல் காந்தி படிக்க வேண்டும்
  • பதவியை காப்பாற்ற காங்கிரஸ் நாட்டில் அவசரநிலை பிரகடனத்தை அமல்படுத்தியது.
New Delhi:

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அரசியலுக்கு பொருத்தமற்றவர் என மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி கடுமையாக விமர்சித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியில் 1975 ஜூன்.25ல் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை பிரகடனம் குறித்து நடந்த கண்காட்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், ராகுல் காந்தி ஜனநாயகத்தையோ, அல்லது மாநில அரசியலையோ, மத்திய அரசியலையோ அல்லது சர்வதேச அரசியலையோ புரிந்து கொள்ளவில்லை. அவர் அரசியலுக்கு பொருத்தமற்றவர். 

மூத்த பாஜக தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான விஜய் கோயலின் இல்லத்தில் நடைபெற்ற கண்காட்சியில் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், துணைத் தலைவரும், டெல்லி பிரிவு பொறுப்பாளருமான ஷியாம் ஜாஜு, டெல்லி பிரிவுத் தலைவர் ஆதேஷ் குப்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியதாவது, அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை "தூக்கி எறிந்து" ஒரு நபரின் பதவியை காப்பாற்ற காங்கிரஸ் நாட்டில் அவசரநிலை பிரகடனத்தை அமல்படுத்தியது. 

அவசரகாலத்தின் போது காங்கிரஸ் செய்த அட்டூழியங்கள் குறித்து ராகுல் காந்தி படிக்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் மக்களின் நலனுக்காக செயல்படுவது தடைசெய்யப்பட்டது, கருத்தடை கட்டாயப்படுத்தப்பட்டது மற்றும் அவசரகாலத்தில் ஊடக சுதந்திரம் பறிக்கப்பட்டது" என்று அவர் கூறினார்.

கோயல் மற்றும் அவரது தந்தை மறைந்த சார்டி லால் கோயல் ஆகியோர் அவசரகாலத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர், நாட்டின் ஜனநாயகத்தின் "இருண்ட காலத்தை" இளம் தலைமுறையினருக்கு நினைவூட்டுவதற்காக இந்த கண்காட்சி நடத்தப்பட்டது என்றார்.

"அநீதியையும் சித்திரவதையையும் தாங்கினாலும், ஜனநாயகத்தை பாதுகாத்த அனைத்து போராளிகளையும் நான் வணங்குகிறேன், ஜனநாயகத்தை கொன்றவர்களுக்கு அடிபணியவில்லை. இந்த கண்காட்சியின் மூலம், காங்கிரசின் உண்மையான முகத்தையும் தன்மையையும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்," என்று அவர் கூறினார்.

.