விபத்தால் பிரதமர் பதவியை பெற்றவர் மன்மோகன் சிங் என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.
New Delhi: 'வலுவான தலைமையின் முக்கியத்துவத்தை காங்கிரஸ் கட்சி உணர வைத்துள்ளது' என்று மத்திய பாஜக அமைச்சர் சந்திரா சாரங்கி கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது மத்திய அமைச்சர் சந்திரா சாரங்கி பேசியதாவது-
விபத்து நடந்ததை போல பிரதமராக பதவிக்கு வந்தவர் மன்மோகன் சிங். முன்பு காங்கிரஸ் ஆட்சி நடந்த 10 ஆண்டுகளும் ஊழல்தான் காணப்பட்டது. நாட்டுக்கு வலுவான தலைமை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை காங்கிரஸ் கட்சி எங்களுக்கு உணர வைத்துள்ளது.
சமூகத்தில் பின் தங்கியுள்ள மக்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசும், பிரதமர் மோடியம் கடினமாக உழைக்கின்றனர். 2022-ம் ஆண்டுக்குள் அனைத்து ஏழைகளுக்கும் தரமான வீடு கட்டித் தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.