சிகாகோவில் கடந்த சனிக்கிழமை இரவு தொடங்கி ஞாயிறு அதிகாலை வரை ஏழு மணி நேரத்தில் 40 பேர் சுடப்பட்டுள்ளனர். இதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். சிகாகோவில் தொடர்கதையாகி வரும் இத்தகைய சம்பங்கள் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு குறைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
"இவை குறிவைத்தும் இலக்கு இன்றியுமாக பல்வேறு இடங்களில் தனித்தனியாக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடுகள்" என சிகாகோ நகர காவல்துறையின் ரோந்துப் பிரிவு தலைவர் வாலர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
'இவற்றுள் பல நகரில் இயங்கி வரும் கும்பல்களுக்கு இடையேயான வன்முறையுடன் தொடர்புடையவை' என்றும் அவர் கூறினார்.
ஆகஸ்ட் 1 நிலவரப்படி, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 533 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் குறைவாக நடந்துள்ளன இதுகுறித்து ஆராய்ந்து வரும் சிகாகோ டிரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது.
"எனினும் இது எவ்விதத்திலும் எங்களுக்கு வெற்றி இல்லை. வன்முறைக் கும்பல்களைக் குறிவைத்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். நிச்சயம் இதில் தோல்வியடைய மாட்டோம் என நம்புகிறோம்" என வாலர் தெரிவித்தார்.
27 இலட்சம் பேர் வசிக்கும் சிகாகோ அமெரிக்காவின் மூன்றாவது பெரிய மாநகரமாகும்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)