கடந்த வாரம் வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சிஎன்என் நிருபர் அகஸ்டோ அதிபர் ட்ரம்ப்பை நோக்கி கேள்விகளை எழுப்பினார். அதற்கு கோபப்பட்ட ட்ரம்ப் பத்திரிக்கையாளரை தன் உதவியாளரை கொண்டு வெளியேற்ற சொன்னது மட்டுமின்றி அவரது வெள்ளை மாளிமை அனுமதியையும் ரத்து செய்தார். இதற்கு ட்ரம்ப் மீது கருத்துரிமைக்கு எதிராக செயல்படுகிறார் என்ற விமர்சனஙகள் எழுந்தன.
இதற்கு பதிலளிக்கும் வகையில் சிஎன்என், அகஸ்டோவை மீண்டும் வெள்ளை மாளிகைக்குள் அனுமதிக்க வேண்டுமென்ற வழக்கை, அதிபர் ட்ரம்ப் மற்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்தது.
தற்போது மீண்டும் அகஸ்டோவுக்கு வெள்ளை மாளிகை அனுமதியை ட்ரம்ப் நிர்வாகம் வழங்கியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிபர் ட்ரம்ப் " இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஆனால் அவர் மீண்டும் இதே போல் நடந்து கொண்டால் அவருக்கு அனுமதி கட்டாயம் மறுக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
மேலும், "இது குறித்து சட்ட வல்லுனர்களை கொண்டு வெள்ளை மாளிகைக்கான அனுமதியில் திருத்தங்கள் கொண்டு வரப்படும்" என்றும் கூறியுள்ளார்.
"இதற்கு அவர்கள் பக்கம் உள்ள கேமராவை அனைத்துவிட்டாலே போதும். ஏனெனில் அவர்கள் யாரும் அப்போதே அதை ஒளிபரப்பு செய்யவில்லை. வெற்றி தோல்வி என்பது வேறு ஆனால் சட்டங்களை யாரும் தவறாக பயன்படுத்தக்கூடாது" என்றார் டரம்ப்.
சென்ற வாரம் கால வரையரையின்றி ரத்து செய்யப்பட்ட அனுமதி தற்போது தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளது. ட்ரம்ப்பின் இந்த செயலுக்கு பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.