This Article is From Feb 05, 2019

''தவறு என்று தெரிந்தே செய்துள்ளார்கள்'' - அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் மீது விசா ஊழல்!

டெல்லியிலிருந்து அமெரிக்க தூதரகம் மூலம் வந்த கோரிக்கைக்கு பின்னர் அமெரிக்கா மாணவர்களை வெளியேற்றுவது குறித்து விவாதிப்பதாக கூறியுள்ளது.

''தவறு என்று தெரிந்தே செய்துள்ளார்கள்'' - அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் மீது விசா ஊழல்!

வகுப்பறைகள் கூட இல்லாத போலி பல்கலைக்கழகம், மிக குறைவான கட்டணத்தில் 600 மாணவர்களுக்கு அட்மிஷன் வழங்கியுள்ளது.

Washington:

அமெரிக்காவில் போலி பல்கலைக்கழகத்தில் பதிவு செய்துள்ள 130 வெளிநாட்டு மாணவர்களில், 129 பேர் இந்திய மாணவர்கள். அவர்களுக்கு அவர்கள் அமெரிக்காவில் போலி விசா மூலம் குடியேறியிருப்பது குற்றம் என்று தெரிந்தே செய்துள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை இந்தியா அமெரிக்க தூதரகத்துக்கு மாணவர்கள் கைது தொடர்பாக அனுப்பிய நோட்டிஸுக்கு பிறகு தெரிவித்துள்ளது. ஃபார்மிங்டன் பல்கலைக்கழகம் போலியாக அமெரிக்காவில் உள்ளது என்று பதிவு செய்யப்பட்டிருந்த மாணவர்கள் அனைவரையும் அமெரிக்க அரசின் குடியுரிமை அதிகாரிகள் கைது செய்தனர்.

பாதுகாப்பு துறை விசாரணையில் போலி பல்கலைக்கழகம் கண்டறியப்பட்டது. இந்த பல்கலைக்கழகம் போலிதான் என தெரிந்து மாணவர்கள் இந்த தவறை செய்துள்ளதாகவும், இதற்கு ஆசிரியர் , வகுப்பறைகள் என்றெல்லாம் அமைப்புகள் ஏதுமில்லாமல் இருப்பதாகவும் அமெரிக்க செய்தி தொடர்பாளர் பிரிவு தெரிவித்துள்ளது.

டெல்லியிலிருந்து அமெரிக்க தூதரகம் மூலம் வந்த கோரிக்கைக்கு பின்னர் அமெரிக்கா மாணவர்களை வெளியேற்றுவது குறித்து விவாதிப்பதாக கூறியுள்ளது. இந்தியா இந்த விஷயத்தில் அதிகமான கவனம் செலுத்தி வருகிறது. 

இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இந்திய குடிமகன்களாக இருக்கலாம் அல்லது அமெரிக்க வாழ் இந்தியர்களாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

வகுப்பறைகள் கூட இல்லாத போலி பல்கலைக்கழகம், மிக குறைவான கட்டணத்தில் 600 மாணவர்களுக்கு அட்மிஷன் வழங்கியுள்ளது. அதில் பெரும்பாலானோர் இந்தியர்கள். இதன் காரணமாக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய சூழலில் 100க்கும் அதிகான மாணவர்கள் உள்ளனர். 

இந்த மாணவர்களுக்கு சட்ட ரீதியாக உதவ இந்திய தூதரகம் முயற்சித்து வருகிறது. பல்கலைக்கழகத்தின் விசா ஊழலில் அப்பாவி மாணவர்கள் சிக்கியுள்ளனர் என்று மாணவர்களுக்கு ஆதரவானவர்கள் தெரிவிக்கின்றனர். 

அமெரிக்காவில் படிக்கும் 10 லட்சம் பேரில் 1.96 லட்சம் பேர் இந்தியர்கள் என்கிறது புள்ளிவிவரம். இதுபோன்ற தவறுகள் அரிதானவை. இந்தியா - அமெரிக்கா இடையே கல்வி தொடர்பான உறவுகள் பலமாகவே உள்ளன என்கின்றது அமெரிக்கா. 

இதுபோன்று பல மாணவர்கள் இந்த பல்கலைக்கழகத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானோர் தெலுங்கு பேசும் மாணவர்கள். பலருக்கு இது அனுமதி மறுக்கப்பட்ட பலகலைக்கழகம் என்பதே தெரிவதில்லை. அவர்களது உயர்கல்வி கனவு இதோடு முடிந்துவிடும் என்பதையும் அவர்கள் அறியவில்லை என்று வட அமெரிக்க தெலுங்கு கூட்டமைப்பு கூறியுள்ளது. 

சிபிடி இல்லாமல் எந்த பல்கலைக்கழகம் அட்மிஷன் வழங்கினாலும் அது போலிதான் என்றும் கூறியுள்ளனர். 

மாணவர்களை மீட்க 24 மணி நேரமும் இந்திய தூதரகம் போராடி வருவதாக கூறியுள்ளனர்.

.