உன்னாவோவைச் சேர்ந்த பெண் ஜுலை முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
New Delhi: முன்னாள் பாஜக எம்.எல்.ஏ அரசியல்வாதி குல்தீப் செங்கரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் இளம்பெண்ணின் அறிக்கையை பதிவு செய்ய டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நீதிபதி வருகை தந்துள்ளார். உன்னாவோவைச் சேர்ந்த பென் ஜுலை முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அப்பெண் தனது குடும்பத்தினருடன் சென்று கொண்டிருந்த காரில் லாரி மோதியதில் கடுமையாக பாதிகப்பட்டார். அந்தப் பெண்ணை லாரி வைத்து இடித்து பாதிப்புக்குள்ளாக்கியதில் குல்தீப் செங்காருக்கு தொடர்பு உண்டு என்று பொது மக்கள் பலரும் சீற்றம் கொண்டனர். உன்னாவ் பாலியல் வழக்கில் விசாரணைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் எய்ம்ஸ் சிறப்பு நீதிமன்றம் அமைக்கலாம் என்று கடந்த வாரம் உத்தரவிட்டது.
எய்ம்ஸில் சிறப்பு விசாரணைக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகளே முடிவு செய்யுமாறு உச்சநீதிமன்றம் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டது. ஜூலை 28 அன்று கார் விபத்து தொடர்பான விசாரணையை முடிக்க சிபிஐக்கு உயர் நீதிமன்றம் அதிக நேரம் வழங்கியது. விபத்தில் தப்பி பிழைத்த குடும்பத்தினர் குல்தீப் செங்கரின் சதி என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
உன்னாவ் பெண் தன் குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது வேகமாக வந்த லாரி ஒன்று இடித்து சென்றத்து. இந்த சம்பவத்தில் பெண்ணின் அத்தை இருவர் உயிரிழந்தனர். பெண்ணும், வழக்கறிஞரும் படுகாயமடைந்தனர். ஆகஸ்ட் 1ம் தேதி உன்னாவ் பாலியல் வழக்கில் தொடர்புடைய ஐந்து வழக்குகளை டெல்லிக்கு உச்ச நீதிமன்றம் மாற்றியது. அன்றாட விசாரணைக்கு சிறப்பு நீதிபதியை நியமித்தது. 45 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க உத்தரவிட்டது. குடும்பத்திற்கும் தக்க பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது.