This Article is From Dec 16, 2019

''உன்னாவோ வழக்கில் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கர் குற்றவாளி''

உன்னாவோ விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக உத்தரப்பிரதேசம் மாறிவிட்டது என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. 

''உன்னாவோ வழக்கில் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கர் குற்றவாளி''

2017-ல் பாலியல் பலாத்கார சம்பவம் நடந்திருக்கிறது.

New Delhi:

உன்னாவோ பாலியல் பலாத்கார வழக்கில் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கர் குற்றவாளி என்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அவருக்கு வழங்கப்படும் தண்டனை குறித்த விவரங்கள் நாளை அறிவிக்கப்படும். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சசி சிங் என்பவரை நீதிமன்றம் விடுவித்துள்ளது. 

செங்கரை இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376 மற்றும் போக்சோ சட்டம் பிரிவு 5 சி மற்றும் 6 ஆகிவற்றின் கீழ் குற்றவாளி என்று டெல்லி திஸ் ஹஸாரி நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. 

உத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவோ மாவட்டத்தில் 23 வயது பெண் ஒருவர் கடந்த மார்ச் மாதம் பாலியல் புகார் ஒன்று அளித்தார். அதில், தனது கிராமத்தை சேர்ந்த 2 ஆண்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதனை வீடியோவாக எடுத்து வைத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். 2017-ல் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

இதையடுத்து, அவர் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கர் உள்பட இருவரில் ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர். 

வழக்கு விசாரணை தொடர்பாக அந்த பெண் நீதிமன்றம் செல்லும் வழியில் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று அந்த பெண்ணை தீ வைத்து எரித்துக் கொலை செய்ய முயற்சி செய்தது. இதில் 90 சதவீத காயங்கள் அடைந்த அவரை, டெல்லி சப்தார் ஜங் மருத்துவமனையில் அதிகாரிகள் அனுமதித்தனர். இருப்பினும் அவர் அங்கு மாரடைப்பால் உயிரிழந்தார்.

நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு உத்தரப்பிரதேச அரசு சார்பாக ரூ. 25 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

இந்த விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக உத்தரப்பிரதேசம் மாறிவிட்டது என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. 

.