குல்தீப் செங்கார் தற்போது சிறையில் இருக்கிறார்.
New Delhi: உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளக்கப்பட்ட வழக்கில் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சிபிஐ தரப்பு, குல்தீப் சிங் செங்கார் தனது வீட்டில் 2017ஆம் ஆண்டில் ஜூன் 4 ஆம் தேதி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அப்போது அந்தபெண் மைனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குல்தீப் செங்கார் தற்போது சிறையில் இருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண் கார் விபத்தில் படுகாயமடைந்துள்ளார். அந்த வழக்கும் தற்போது விசாரணையில் உள்ளது. சமீபத்தில் மருத்துவமனையில் இருந்து வெளியேறியவர். உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றப்பத்திரிக்கை டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் நீதிபதி தர்மேஷ் சர்மா முன் தாக்கல் செய்யப்பட்டது. கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய சிபிஐ நேரம் கோரியது. விசாரிக்கப்பட வேண்டிய சாட்சிகளின் பட்டியலையும் அக்டோபர் 10ம் தேதி நீதிமன்றம் பட்டியலிட்டது.
நரேஷ் திவாரி, பிரிஜேஷ் யாதவ் சிங் மற்றும் சுபம் சிங் ஆகிய மூன்று பேரை குற்றப்பத்திரிகையில் சிபிஐ குற்றம் சாட்டியது. மூவரும் ஜாமீனில் வெளியே உள்ளனர்.
குற்றப்பத்திரிகையின் படி, ஜூன் 4 ஆம் ஜூன் 4 ஆம் தேதி குல்தீப் செங்கார் வன்புணர்வு செய்ததற்கு பின் அந்தப்பெண் காவல்துறையில் புகார் அளித்ததையடுத்து அந்த பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்.
அப்பெண்ணின் தந்தையும் காவல்துறையின் பாதுகாப்பில் இருந்தபோது இறந்தது குறிப்பிடத்தக்கது.