சனிக்கிழமை மருத்துவர்கள் "ஆபத்தான நிலையில்" இருப்பதாக தெரிவித்தனர்
New Delhi: உன்னாவ் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் காரில் உறவினர்களுடன் சென்ற போது லாரி இடித்ததில் படுகாயமடைந்தார். அந்த பெண்ணின் வழக்கறிஞரும் படுகாயமடைந்துள்ள நிலையில் லக்னோவிலிருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்ல உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு வாரத்துக்கும் மேலாக சிகிச்சை பெற்று வரும் உன்னாவ் இளம்பெண்ணின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. இந்த நிலையில் விமானம் மூலம் டெல்லி கொண்டு வந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
உன்னாவ் பெண்ணின் நிலை சற்று முன்னேறியுள்ளதாகவும் செயற்கை சுவாசம் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
“உன்னாவ் பெண்ணின் உடல் நிலை தேறி வருவதாகவும். நினைவுகள் உள்ளதென்றும் கண்களை திறந்து மூடுகிறார் என்றும் கூறியுள்ளனர். மேலும் காய்ச்சல் குறைந்துள்ளது. இரத்த அழுத்தம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
வழக்கறிஞரின் உடல் நிலையும் சற்று முன்னேறியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். செயற்கை சுவாசமின்றி சுவாசிக்க கூடிய நிலையில் வழக்கறிஞர் உள்ளதாக தெரிவித்தனர்
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)