New Delhi: உத்தர பிரதேச மாநிலம் உன்னாவோவில் பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்ட பெண் ஜூலை 28 ம் தேதி சாலை விபத்த்தில் படுகாயம் அடைந்தார். அவரின் சிகிச்சைகளுக்காக டெல்லிக்கு மாற்றப்படமாட்டார் என்று அவரது குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தனர். லக்னோவில் மருத்துவமனையிலேயே சிகிச்சையை தொடர்வார் எனத் தெரிவித்துள்ளனர்.
ரேபரேலியில் பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது குடும்பத்தினரும் விபத்தில் சிக்கினர். அவர்கள் பயணித்த கார் ட் ரக் மீது மோதியது. அதன் நம்பர் பிளேட் கருப்பு நிற பெயிண்ட் பூசப்பட்டு இருந்தது. உறவினர்களில் இருவர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணும் வழக்கறிஞரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டனர்.
இந்நிலையில் இன்று உச்ச நீதிமன்றம் பாதிக்கப்பட்ட பெண்ணை டெல்லிக்கு ஃப்ளைட் மூலமாக கொண்டு வந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கலாமென கூறியது. இதற்கு பெண்ணின் தாயார் அதற்கான தேவை ஏதும் தற்போது இல்லை என்றும் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் நிலை சற்று தேறியதும் டெல்லி மாற்றலாம் என்று ரஞ்சன்கோகாய் தலைமையிலான நீதிபதி அமர்வு இதை தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் பாலியல் பலாத்காரத்திலிருந்து தப்பியவரின் அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று செய்தி நிறுவனங்களிடம் கூறியது. ஊடகங்கள் அவரின் பழைய நேர்காணலை வெளியிட வேண்டாம் என்று கூறியுள்ளது.
பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பியவருக்கு காய்ச்சல் உள்ளது. வெண்டிலேட்டர் வசதியில் உள்ளார் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.