This Article is From Aug 07, 2019

வரலாறு காணாத புதிய உட்சம்: ரூ.28 ஆயிரத்தை தாண்டியது ஒரு சவரன் தங்கம்!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் சவரணுக்கு ரூ.568 அதிகரித்து ரூ.28,358 ஆக உள்ளது.

வரலாறு காணாத புதிய உட்சம்: ரூ.28 ஆயிரத்தை தாண்டியது ஒரு சவரன் தங்கம்!

தங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சவரன் ஒன்றின் விலை ரூ.568 உயர்ந்து ரூ.28,358-க்கு விற்பனையாகிறது. தற்போதைக்கு தங்கத்தின் விலை குறைவதற்கு வாய்ப்பில்லை என்றும், அதிகரிக்கவே வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

தங்கத்தின் விலை எப்போதும் இல்லாத வகையில், கடந்த 2ஆம் தேதி புதிய உச்சத்தை எட்டியது. அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, சர்வதேச சந்தையில் தங்கத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களே ஆபரணத்தங்கத்தின் விலை உயர காரணம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது. சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதேபோன்று, அமெரிக்காவில் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைக்கப்பட்டது. இவற்றின் காரணமாக சர்வதேச பொருளாதாரத்தில் தற்போது சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. 

இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் சவரணுக்கு ரூ.568 அதிகரித்து ரூ.28,358 ஆக உள்ளது. 22 கேரட் ஆபரணதங்கம் கிராமுக்கு ரூ.71 உயர்ந்து ரூ.3,544க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.10 உயர்ந்து ரூ.46.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
 

.