This Article is From Apr 21, 2019

உத்தர பிரதேசத்தில் பஸ் – ட்ரக் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு – 30 பேருக்கு காயம்

விபத்தின்போது பஸ் டிரைவர் உயிரிழந்தார். காயம் அடைந்தவர்கள் சைபாய் நகரில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் பஸ் – ட்ரக் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு – 30 பேருக்கு காயம்

பேருந்தின் இடது புறம் முழுவதும் சேதம் அடைந்துள்ளது.

Lucknow:

உத்தர பிரதேசத்தில் நடந்த கோர விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து வாரணமாசி நோக்கி சென்ற ஒன்றில் சுமார் 50 பேர் இருந்துள்ளனர்.

இந்த பஸ் மெய்ன்புரி மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது ட்ரக் ஒன்றின் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் குறைந்தது 7 பேராவது உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 30 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் சைபாய் நகர் அருகேள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்ட்டுள்ளனர். ஆக்ரா – லக்னோ எக்ஸ்ப்ரஸ் சாலையில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. ட்ரக் வாகனத்தை முந்துவதுற்கு பஸ் டிரைவர் முயற்சி செய்திருக்கிறார். அப்போது ஏற்பட்ட விபத்தில் பஸ்ஸின் இடது பக்கம் முழுவதும் பயங்கர சேதம் அடைந்திருக்கிறது.

இதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

.