பார் கவுன்சிலுக்கு நடந்த தேர்தலில் தர்வேஷ் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஹைலைட்ஸ்
- தர்வேஷ் யாதவ சக வழக்கறிஞர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்
- தலைவராக வெற்றி பெற்று 2 நாளே ஆகியுள்ளது.
- வெற்றி பெற்றதற்கான பாராட்டு விழாவின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்
Agra: உத்திர பிரதேச பார் கவுன்சில் பெண் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தர்வேஷ் யாதவ் ஆக்ரா நீதிமன்ற வளாகத்தில் சக வழக்கறிஞர் ஒருவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் பார் கவுன்சிலுக்குநடந்த தேர்தலில் தர்வேஷ் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். உ.பி பார் கவுன்சிலுக்கு முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் இவர்தான். இரண்டு நாட்களுக்கு முன்புதான் தர்வேஷ் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்காக, அவருக்கு ஆக்ரா நீதிமன்ற வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது. பாராட்டு விழாவில் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
விழா நடந்து கொண்டிருந்த போது வழக்கறிஞர் மனிஷ் சர்மா என்பவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை வைத்து தர்வேஷ் யாதவ்வை நோக்கி சுட்டார். தர்வேஷ் யாதவ் உடலில் 3 குண்டுகள் பாய்ந்தன. சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் இறந்தார். மனிஷ் சர்மாவும் தற்கொலை முயற்சியாக தன்னையும் சுட்டுக் கொண்டார். பலத்த காயமடைந்த அவரை போலீஸார் மீடு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட தர்வேஷ் சிங் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பார் கவுண்சில் நடந்த இந்த சம்பவத்திற்கு கண்டனத்தை தெரிவித்துள்ளது. இறந்த வழக்கறிஞர் யாதவ் குடும்பத்திற்கு 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென உத்தர பிரதேச அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பல்வேறு அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. எதிர்கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
சமாஜ்வாதி அகிலேஷ் யாதவ் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக குற்றம் சாட்டினார்
2004 ஆம் ஆண்டு முதல் தர்வேஷ் சிங் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவரை சுட்டுக் கொன்ற சக வழக்கறிஞர் மனிஷ் ஷர்மாவுக்கு நீண்ட காலம் பழக்கம் உண்டு. கொலை குறித்து விசாரணைகள் நடந்து வருகிறது.