Read in English
This Article is From Nov 02, 2018

அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாத தீபாவளியை வேண்டுகிறேன்: யோகி

கோவில் நகரமான அயோத்தியில் சரயூ ஆற்றங்கரைப் பகுதியில் தீப உற்சவம் நடைபெற இருப்பதால் அப்பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டுமென்று பைசாபாத் மாவட்ட தலைமை நீதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்

Advertisement
இந்தியா

வீடியோ கான்பிரன்ஸ் மூலம் அதிகாரிகளுக்கு இந்த செய்தியை யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்

Lucknow:

உத்திரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மாவட்ட நீதிபதிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம், அமைதியான, அசம்பாவிதங்கள் அற்ற தீபாவளி கொண்டாடப்பட முழு முயற்சியில் ஒத்துழைப்பு அழைக்க வேண்டுகோள் விடுத்தார்.

கோவில் நகரமான அயோத்தியில் சரயூ ஆற்றங்கரை பகுதியில் தீப உற்சவம் நடைபெற இருப்பதால் அப்பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டுமென்று பைசாபாத் மாவட்ட தலைமை நீதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

வியாழனன்று அதிகாரிகளுடன் வீடியோ கான்பிரன்சில் யோகி ஆதித்யநாத் கலந்து ஆலோசித்தார்.

சரயூ நதிக்கரையில் பல்லாயிரக்கணக்கான விளக்குகளை பக்தர்கள் ஏற்றி வழிபடுவதை யோகி ஆதித்யநாத் வழி நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

தீப ஒளி திருவிழாவின் போது மின்சாரம் மற்றும் நீர் தட்டுப்பாடின்றி கிடைக்கப்பட வேண்டுமென்று அவர் கூறினார்.

தீயணைப்புதுறை, மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement